குறும்செய்திகள்

சிறுநீரக நோய்களை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை சூப்..!

Mookirattai Keerai Soup Recipe

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகி விடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மற்றும் சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகி விடும்.

அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

தேவையான பொருட்கள் :

மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த மூக்கிரட்டை கீரை சூப் ரெடி… 🙂

Mookirattai Keerai Soup Recipe

Related posts

விக்ரம் எடுத்துள்ள திடீர் முடிவு..!

Tharshi

வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

பிசாசு 2 படத்திற்காக உச்சக் கட்ட கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆண்ட்ரியா..!

Tharshi

1 comment

Leave a Comment