குறும்செய்திகள்

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்..!

Another Bigg Boss celebrity who teamed up with Vikram Movie

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம், கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என பல பிரபலமான நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் நடத்தப்பட்டது. இதில் முக்கிய காட்சிகள் பலவும் படமாக்கப்பட்டு விட்டதாம். கமல், விஜய் சேதுபதி, மைனா நந்தினி, வி.ஜே.மகேஷ்வரி, ஷிவானி ஆகியோர் நடித்த காட்சிகள் 3 வாரங்களாக எடுக்கப்பட்டு வந்தன.

மெயின் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. கமலுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முக்கிய அப்டேட்டாக பிரபல நடன அமைப்பாளர் சாண்டி மாஸ்டரும் விக்ரம் படத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் சாண்டி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,

“கமல் சாரின் விக்ரம் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தது நன்றி அண்ணா. ஒரு நடன அமைப்பாளராக இந்த படம் எனது சினிமா பயணத்தில் மைல் கல்லாக இருக்கும். நிஜமாகவே நிறைய கற்றுக் கொண்ட அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது சார். லவ் யூ தலைவா” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே “பிக்பாஸ் சீசன் 4” ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில் தற்போது இவரும் இணைந்துள்ளார்.

சாண்டியின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தொகுத்து வழங்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Another Bigg Boss celebrity who teamed up with Vikram Movie

Related posts

உள்நாட்டு மீனவர்களிடையே இந்திய டெல்டா கொவிட் திரிபு பரவக்கூடிய அபாயம்..!

Tharshi

2வது டி20 : இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி..!

Tharshi

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைவிட்டது அவுஸ்திரேலியா..!

Tharshi

Leave a Comment