குறும்செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் : 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய பெங்களூர் அணி..!

IPL Cricket Bangalore won by 54 runs

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் மில்னே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 24 ரன்களில் குவிண்டன் டிகாக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பிறகு மும்பை அணிக்கு மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இஷான் கிஷன் 9 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் வெளியேறினார். குருனால் பாண்டியா 8 ரன்களில் பவுல்ட் ஆனார்.

இதைத் தொடர்ந்து ஹர்ஷத் பட்டேல் 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா(3), பொல்லார்ட்(7), ராகுல் சாஹர்(0) ஆகியோரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக 18.1 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL Cricket Bangalore won by 54 runs

Related posts

சீல் வைக்கப்பட்ட சீனி களஞ்சியசாலை அனுமதியின்றி திறப்பு : மூவர் கைது..!

Tharshi

யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு : அசர வைக்கும் தகவல்கள்..!

Tharshi

விரைவில் விற்பனைக்கு வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Tharshi

Leave a Comment