குறும்செய்திகள்

28-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

28th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 28.2021

பிலவ வருடம், புரட்டாசி 12, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, சப்தமி திதி மாலை 4:31 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 7:54 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
பரணி: நிதிநிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு வரும்.
கார்த்திகை 1: முயற்சி ஒன்றில் சுமாரான முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முந்தைய முயற்சி ஒன்று இப்போது நல்ல பலன் தரும்.
ரோகிணி: உடன் பிறந்தவர்களால் எதிர்பார்த்த அளவு உதவிகள் இருக்காது.
மிருகசீரிடம் 1,2: மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். மனம் தெளிவாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சிறக்கும்.
திருவாதிரை: தெய்வ வழிபாடு மன நிறைவு தரும். உற்சாகம் மிகும்.
புனர்பூசம் 1,2,3: நண்பர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: புதிய திட்டங்கள் தாமதமாகும். பணியாளர்கள் நன்மை அடைவர்.
பூசம்: குழந்தைகளின் நடவடிக்கை பற்றி கூடுதல் கவனம் வேண்டும்.
ஆயில்யம்: திருப்தியான நாள். திருமணம் ஏற்பாடாகும். உடல் நலம் சீராகும்.

சிம்மம் :

மகம்: புதிய அலுவலகம் சேரும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
பூரம்: கவலை தீரும். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
உத்திரம் 1: மனதில் உற்சாகம் கூடும். பேச்சால் நன்மை உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: சாதாரணமாக பேசிய வார்த்தைகளால் நல்ல பலன் வரும்.
அஸ்தம்: மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தெய்வீக சிந்தனை நிறைவளிக்கும்.
சித்திரை 1,2: இன்று அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

துலாம்:

சித்திரை 3,4: முதலீடுகள் செய்ய ஏற்ற காலம். பணியிடத்தில் ஏற்றம் உண்டு.
சுவாதி: தேவையான மருத்துவ சிகிச்சையால் நலம் அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் கவனமாக செயல்படுங்கள். பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்:

விசாகம் 4: வாகன வகையில் சிறிய செலவு ஏற்படும். வீண்வம்பைத் தவிர்க்கவும்.
அனுஷம்: சிறு மனஅழுத்தம் ஏற்பட்டு மறையும். செலவு ஏற்படும்.
கேட்டை: நிலம் சம்பந்தபட்ட இனங்களில் முதலீடு செய்வது நல்லது.

தனுசு:

மூலம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பூராடம்: பொதுநல சேவை நன்மை தரும். பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.
உத்திராடம் 1: எதிலும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறு பற்றாக்குறை ஏற்படலாம்.
திருவோணம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு அதிகமாக உழைப்பீர்கள்.
அவிட்டம் 1,2: முன்யோசனையுடன் செயல்பட்டு சிரமத்திலிருந்து மீளுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பண நெருக்கடியால் குடும்பத்தில் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள்.
சதயம்: எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சுபச்செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்திருந்த நல்ல விஷயத்தில் தாமதம் ஏற்படும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பரபரப்பான நாள்.
ரேவதி: தனவரவு நன்றாக இருக்கும். மூளை உழைப்பு அதிகரிக்கும்.

28th September Today Raasi Palankal

Related posts

பெங்களூரில் 47 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்தது : மயிரிழையில் தப்பிய 30 தொழிலாளர்கள்..!

Tharshi

கொரோனாவைத் தடுக்க 2 புதிய மருந்துகள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு..!

Tharshi

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment