குறும்செய்திகள்

விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்..!

Mike Tyson getting ready to fight Vijay Thevarakonda

உலகளவில் புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இப் படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது..,

“நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.

இன்னும் சில நாட்களுக்கு, உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Mike Tyson getting ready to fight Vijay Thevarakonda

Related posts

யாழில் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இருவர் தற்கொலை..!

Tharshi

10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்..!

Tharshi

இன்றைய முக்கிய செய்திகள் (09.06.2021) (காணொளி)

Tharshi

Leave a Comment