குறும்செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்..!

Sun Risers Hyderabad beat Rajasthan Royals by 7 Wickets

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் ஜேசன் ராய், வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

எவின் லிவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆனார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத் அணி பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர்.

11 பந்துகளை சந்தித்த சஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் ராஜஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 8 பவுண்டர்கள், 1 சிக்சர் உள்பட 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த ரியான் பராக் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால், மறுமுறையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லயம்சன் அரைசதம் கடந்தார்.

இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் 167 ரன்களை எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

வில்லியம்சன் 51 ரன்களிலும், அபிஷேக் சர்மா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான், மஹிபால் லூமோர், சேதன் சகரியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Sun Risers Hyderabad beat Rajasthan Royals by 7 Wickets

Related posts

24-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் : பிரிட்டன் அறிவிப்பு..!

Tharshi

ஆவணி மாதத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டிய 5 ராசிகள்..!

Tharshi

Leave a Comment