குறும்செய்திகள்

டெல்லி சிறை வார்டில் தங்களுக்குள் அடித்து கொண்ட கைதிகள் 25 பேர் காயம்..!

At least 25 people have been injured in New Delhi Jail Ward

டெல்லியில் சிறை வார்டில் இருந்து வெளியே செல்ல விடாததற்காக, கைதிகள் சிலர் தங்களுக்குள் அடித்து கொண்டதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் மண்டோலி சிறையில் கைதிகளில் 2 பேரை அவர்களுடைய வார்டில் இருந்து வெளியே வர விடாமல் தடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் அந்த கைதிகள் இருவரும் அவர்களாகவே சிறிய அளவில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன்பின்னர் அவர்கள் பிற கைதிகளையும் இதேபோன்று, காயங்களை ஏற்படுத்தி கொள்ளும்படி தூண்டியுள்ளனர். இதுபோன்று கைதிகள் ஒருவருக்கொருவர் காயம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர். இதன்படி, 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், கைதி ஒருவருக்கு பலத்த காயமேற்பட்டுள்ளது. இதனால், அந்நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பின்னர் சிறைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

At least 25 people have been injured in New Delhi Jail Ward

Related posts

31 வயது மருத்துவரை பலியெடுத்த கொவிட்..!

Tharshi

28-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலையை பரிசளித்த பிரான்ஸ்..!

Tharshi

Leave a Comment