குறும்செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர்..!

Joe Biden paying the booster dose

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டார்.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமெரிக்காவில் பைசர், மாடர்னா தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம், அந்நாட்டில் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்புசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பலருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டார்.

78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் திகயும், 2-வது டோசை ஜனவரி 11-ம் திகதியும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Joe Biden paying the booster dose

Related posts

02-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

Tharshi

13-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment