குறும்செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா தொற்று..!

26727 people confirmed infected corona in the last 24 hours In India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 20 ஆயிரத்துக்குள் அடங்கியது. ஆனால் நேற்று பரவல் திடீரென அதிகரித்து, தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.

காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 23 ஆயிரத்து 529 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு..,

“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 28,246 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 224  ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,30,43,144 ஆக உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது.

26727 people confirmed infected corona in the last 24 hours In India

Related posts

அமெரிக்காவின் மீண்டும் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி – 13 பேர் படுகாயம்..!

Tharshi

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

Tharshi

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!

Tharshi

Leave a Comment