குறும்செய்திகள்

அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் : ரிலீஸ் திகதி இதோ..!

Annaatthe first single release date Announced

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள “அண்ணாத்த” படம் வருகிற நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், “அண்ணாத்த” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Annaatthe first single release date Announced

அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Annaatthe first single release date Announced

Related posts

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் : ஆய்வில் தகவல்..!

Tharshi

இன்று இதுவரை 2340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

2024 இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் டிரம்ப் விடுக்கும் அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment