குறும்செய்திகள்

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Circular proving the public service has been released

அரச சேவையை வழமை போன்று நடத்திச் செல்வதற்கான சுற்று நிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டு கொண்டு, அவ்வாறானவர்களை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சாரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை வைத்திருப்போர், போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வோர் மற்றும் தனியான வாகனங்களில் வருகை தருவோருக்கு இந்த நடைமுறை உரித்துடையது அல்லவெனவும், அவ்வாறானவர்கள் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அரச ஊழியர்கள் இணைய வழியின் ஊடாக தமது கடமைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடமைகளுக்கு அழைக்கப்படும் நபர்கள், கடமைக்கு சமூகமளிக்காத நாட்களில் இணைய வழியாக தமது கடமைகளை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களை கடமைக்கு அழைக்கக்கூடாது எனவும், அவ்வாறான ஊழியர்கள் அத்தியாவசிய கடமைகளுக்காக மாத்திரம் அழைக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குறித்த நபர்கள் கடமைகளுக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்கான விசேட கடமை நேரமொன்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்காக வருகை மற்றும் வெளியேறும் நேரங்களை குறிப்பிடும் ஆவணங்களை மாத்திரம் கையாள்வது முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Circular proving the public service has been released

Related posts

57 வயதில் 23 வயது பெண்ணுடன் திருமணம் : வாணி ராணி நடிகரின் அதிரடி முடிவு..!

Tharshi

முதல் மூன்று மாதங்களில் திருமணமான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்..!

Tharshi

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு..!

Tharshi

Leave a Comment