குறும்செய்திகள்

அச்சுவேலியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் பலி..!

Family member killed in dog bite in Achuveli

யாழ். அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அவரை கடித்த வளர்ப்பு நாய் மறுநாளே உயிரிழந்துள்ளது.

Family member killed in dog bite in Achuveli

Related posts

இந்தியில் இரண்டு பட வாய்ப்புக்களை தூக்கியெறிந்த காதல் நாயகி..!

Tharshi

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படியென்று தெரியுமா..!

Tharshi

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment