குறும்செய்திகள்

முதியோர்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள் : இன்று சர்வதேச முதியோர் தினம்..!

International Day of Older Persons 2021

டிசம்பர் 14, 1990 தினத்தன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அக்டோபர் 1 ஐ சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத் தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

முதியவர்கள் அனைவரும் அனுபவங்களின் அமுதசுரபியாக திகழ்பவர்கள். வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி போன்ற வார்த்தைகளை சமுதாயத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம்.

மேலும், முதியவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்றவர்கள். முக்கிய பிரச்சினைகளில் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படும் போது, அது நன்மையை பயக்கும். அவர்கள் எப்போதும் சிறு குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். வாழ்வின் யதார்த்தத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்.

இதனால் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள். அவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் வீட்டில் இருப்பதால் வெறுப்பாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். நாளை இதே போன்ற சூழல் உங்களுக்கும் ஏற்படலாம். முதியோர்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியவர்கள்.

International Day of Older Persons 2021

Related posts

யாழில் இளம் வர்த்தகர் தற்கொலை..!

Tharshi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : நெய்மாருக்கு அணியில் இடமில்லை..!

Tharshi

26-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment