குறும்செய்திகள்

03-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

3rd October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 03.2021

பிலவ வருடம், புரட்டாசி 17, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, துவாதசி திதி இரவு 8:44 வரை,
அதன்பின் திரயோதசி திதி, மகம் நட்சத்திரம் நள்ளிரவு 2:44 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : சூரியபகவான் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: துன்பங்கள் துள்ளி ஓடும். முயன்ற விஷயத்தில் வெற்றி கிட்டும்.
பரணி: உள்ளம் மகிழும் நிகழ்ச்சி ஒன்று குடும்பத்தில் நடைபெறும்.
கார்த்திகை 1: எடுத்த புதுமுயற்சி ஒன்றில் அனுகூலம் உண்டு.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: சந்தோஷம் கூடும். கடமையை பொறுப்புடன் செய்வீர்கள்.
ரோகிணி: திருமண வாய்ப்பு கைகூடும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்
மிருகசீரிடம் 1,2: மனபலம் கூடும். தொல்லை தந்த ஒருவர் விலகுவார்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பழைய கவலை தீரும். உறவினரின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வசீகரம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: உடலுக்கு ஒவ்வாத உணவை சாப்பிட வேண்டாம்.

கடகம்:

புனர்பூசம் 4: காலையில் குதுாகலமும், மாலையில் பொறுப்பும் ஏற்படும்.
பூசம்: பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
ஆயில்யம்: மாற்றம் ஒன்று உறுதியாகலாம். நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு.

சிம்மம் :

மகம்: கனிவாகப் பேசி நல்லவர்களின் மனதை கவர்வீர்கள்.
பூரம்: கண் சம்பந்தமான பிரச்னை வராதபடி காத்துக் கொள்ளுங்கள்.
உத்திரம் 1: செயல், பேச்சினால் பெரியவர்களிடம் ஆசி பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியிடத்தில் புதிய பொறுப்பும், செல்வாக்கும் ஏற்படும்.
அஸ்தம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: பெண்கள் முக்கிய காரணத்துக்காக உங்களை நாடுவர்.

துலாம்:

சித்திரை 3,4: பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும்.
சுவாதி: கடமை தவற வேண்டாம். குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும்.
விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்க்கும் நன்மை ஒன்று தாமதமாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வரவு செலவுகளை திட்டமிட்டுச் செய்வது நல்லது.
அனுஷம்: வேலைப்பளு காரணமாக இன்று ஓய்வின்றி உழைப்பீர்கள்.
கேட்டை: எதிர்பார்த்த செலவு இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு:

மூலம்: நண்பர்களும் உறவினர்களும் தக்க சமயத்தில் உதவ காத்திருப்பர்.
பூராடம்: திடீர் கோபம் காரணமாக நல்ல நட்பை இழக்க வேண்டாம்.
உத்திராடம் 1: புதிய பொறுப்புகளைத் திறம்படக் கையாளுவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
திருவோணம்: குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
அவிட்டம் 1,2: புதிய மனிதர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மறதியால் தவறு நேரலாம். உடல் நலனில் கவனம் தேவை.
சதயம்: மாற்றுக் கருத்துடையோரைப் புறக்கணியுங்கள். உழைப்பு பலன் தரும்.
பூரட்டாதி 1,2,3: வேலைப்பளு இருந்தாலும், அதனால் பலனும் கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: பெண்களுக்கு அதிக வேலை இருந்தாலும் சமாளிப்பீர்கள்.
உத்திரட்டாதி: முயற்சிக்கான பலன் தள்ளிப் போகும். உற்சாகம் குறையாது.
ரேவதி: புதிய பதவி கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

3rd October Today Raasi Palankal

Related posts

நுண்கலைக் கல்லூரி மாணவர்களுக்காக இடம்பெற்ற கற்பித்தல் செயற்பாடு..! (வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்ள முடியும்)

Tharshi

புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி அறிமுகம்..!

Tharshi

பாகிஸ்தானுடன் உறவை முறித்து எண்ணெய் சப்ளையை நிறுத்திய சவுதி அரேபியா..!

Tharshi

Leave a Comment