குறும்செய்திகள்

சனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க இதை மட்டும் வீட்டில் செய்து பாருங்க..!

Lord Shani Dev Worship

நம்முடைய ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் என்பவர், எல்லா கிரக ராசிகளுக்கும் பல நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியையும் வழங்கி, அவர்களை சோதிக்கும் கிரகமாக இருப்பதுடன், இவர் யாருக்கும் பாரபட்சமே பார்க்க மாட்டார் என்பதும் நித்திய உண்மை.

அதேசமயம், யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு செல்வத்தையும் இன்பங்களையும் வாரி வழங்கவும் தயங்க மாட்டார். அத்தகைய சனிபகவானின் பிறந்த நாளன்று வீட்டில் சில பூஜைகளை செய்தால், அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திரு்பபார். எந்த தொந்தரவும் செய்யாமல் செல்வங்களை வாரி வழங்குவார் என்ற நம்பிக்கையுண்டு.

சனி பகவான் பிறந்த கதை :

நமது ஜோதிட புராணங்களில் மிகவும் அச்சுறுத்தும் கிரகம் என்றால் அது சனிக்கிரகம் தான். இந்த கிரகத்தின் தலைமை அதிபதியாக திகழ்பவர் தான் சனி பகவான். இவர் யமனின் சகோதர் என்றும் நீதியின் அரசர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிலர், இவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மறு அவதாரம் என்றும் மக்களிடையே நன்மை தீமைகளை பரப்ப உருவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அந்தவகையில், மாபெரும் சக்தியை கொண்டு எல்லா ராசிக்காரர்களையும் ஆட்டிப் படைக்கும் சனீஸ்வரர் பற்றிய கதையை இப்பொழுது பார்க்கலாம்.

சனியின் சகதோரர்கள்

சூரிய பகவானின் மனைவியான சாந்தா ஒரு சிறந்த சிவபக்தை ஆவார். இவர்களுக்கு வைவாஸ்வதா மனு, யமன் மற்றும் யமி என்ற மூன்று குழந்தைகள் இருந்தன. சாந்தா தன் வலிமையை அதிகரிக்க சிவனை நோக்கி தீவிர தவம் புரிய முடிவெடுத்தார்.

ஆனால், சூரிய பகவானை தனியாக விட்டுச் செல்லுவதற்கு மனம் இல்லாத சாந்தா, தன்னுடைய நிழலைக் கொண்டு சாயா தேவி என்ற பெண்ணை உருவாக்கி விட்டுச் சென்றாள். சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். தனது மூன்று குழந்தைகளையும் கணவன் சூரிய பகவானையும் காக்க வேண்டும் என்று சாயா தேவியிடம் சாந்தா கூறி விட்டுச் சென்று விட்டாள்.

சூரிய பகவானின் வெளிச்சத்தில் இருந்து பிரிந்து வந்த சாந்தா தன் தந்தையிடம் செல்கிறார். ஆனால் தந்தையோ, “நீ உன் கணவரிடமே திரும்பிப் போ” எனக் கூற, தந்தையின் வார்த்தையை கொஞ்சமும் விரும்பாத சாந்தா குதிரை வடிவம் எடுத்து காட்டை நோக்கி சிவ தவத்திற்கு தயாராகி சென்றார்.

இந்நிலையில், சூரிய பகவானும் சாயா தேவியை சாந்தாவாக நினைத்து அவருடன் வாழ்ந்தார். இதனால் அவர்களுக்கு மனு, சனி மற்றும் தபதி என்ற மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. சூரிய பகவானின் வெப்பத்தால் சனி பகவான் கருவில் இருக்கும் போதே கருப்பாக மாறி கருமையான நிறத்தில் பிறந்தார்.

தாயின் சாயல் (நிழல்) சனி பகவானுக்கு வந்ததால் அவர் கருமையாக தோன்றினார். இதனால் சூரிய பகவான் சனி தன்னுடைய குழந்தையாக இருக்க முடியாது என்று சாயா தேவியை சந்தேகித்தார். அது மட்டுமல்லாமல் சனி பகவான் முதல் முறையாக சூரிய பகவானை சூரிய கிரகணத்தில் பார்த்ததால் அவரின் கெட்ட பார்வை மட்டுமே அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சூரிய பகவானால் சபிக்கப்பட்டார்.

சாயா தேவி தனது குழந்தைகளை அன்புடன் கவனித்து கொண்டார். அவர் தீவிர சிவ பக்தர் என்பதால் ஒரு நாள் சிவனுக்கு பிரசாத உணவு தயாரித்து எடுத்துச் சென்றார். அப்பொழுது சிறு குழந்தையாக இருந்த சனி பகவான் பசியின் காரணமாக அதை சாப்பிட முயன்றார். அவரின் தாய் சிவன் பூஜைக்கு பிறகே சாப்பிட வேண்டும் என்று கூறியதால் கோபமடைந்த சனி அவரின் தாயை காலால் உதைத்தார். இதனால் சனி பகவானின் ஒரு கால் முடமானது.

சாயா தேவி சனி பகவானை கருப்பையில் சுமக்கும் போதே சிவனை வழிபட்டு வந்தார். இதனால் சனி பகவானும் சிவனின் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். அவர் சூரிய பகவானிடம் சனியின் பிறப்பு பற்றிய தவறான சந்தேகத்தை தீர்த்து மகன் தந்தைக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்தி கொடுத்தார்.

சனியின் தீவிர பக்தியில் மயங்கிய சிவ பெருமான் அவரை மக்கள் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்கும் தகுந்த மாதிரி வெகுமதியையும் தண்டனையும் கொடுக்கும் கடவுளாக மாற்றினார்.

ஜோதிட கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சனி கிரகம் ஆகும். நாம் செய்யும் பாவ புண்ணியங்களைக் கொண்டே சனி பகவான் தன் அணுகூல பார்வையையும் உக்கிர பார்வையையும் நம் மீது வீசுகிறார்.

எனவே, உங்கள் ஜாதகத்தின் படி சனிப் பார்வை இருந்தால் அவரின் அகோர பார்வையை குறைக்க அவரை வழிபட்டு அவரின் ஆசிர்வாதத்தை பெற்றாலே போதும். எனவே சனி பூஜை நன்மைகளை அள்ளித் தரும் மாபெரும் பூஜை யாகும்.

இந்த சனி பூஜை சனிக்கிழமையில் செய்யப்படுகிறது. இந்த பூஜை விடியற்காலை முதல் பகல் வரை நீடிக்கிறது. விடியற்காலையிலயே பக்தர்கள் எழுந்து உடம்பு முழுவதும் எள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அந்த நாள் முழுவதும் கருப்பு ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த நாள் முழுவதும் எள் எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

கடவுள் கணேசனின் திருவுருவம் கொண்ட படம், சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். அப்படி உங்களுக்கு இது கிடைக்கவில்லை என்றால் பீடத்தின் முன் அமர்ந்து மனதில் அவரை மனசார நினைத்து பூஜை செய்யுங்கள்.

ஹனுமானை நீங்கள் வழிபட்டு வந்தாலும் சனி பகவானின் கூடுதல் அருளை நீங்க பெற இயலும். சிவ பக்தர்கள் சனி பூஜையை சிவ பூஜையுடன் சேர்த்து வணங்கலாம். எந்நாளும் நன்மை கிட்டும்.

விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்க வேண்டும். பிறகு கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்ரி மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆரத்தி காட்டவும்.

நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை திரும்பவும் செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். கண்டிப்பாக விரதத்தின் போது அசைவ உணவை சாப்பிடக் கூடாது. இந்த பூஜை முறைகளை பின்பற்றி வழிபட்டால் சனி பகவானின் அருளை பெற்று நிம்மதியான வாழ்வு வாழலாம்.

Lord Shani Dev Worship

சனி காயத்ரி மந்த்ரா

“ஓம் சனீஸ்வராய வித்மஹே சூர்யபுத்திராய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்” பொருள் : சூரிய பகவானின் புதல்வரான சனி பகவானே..! என் அறிவை வெளிச்சமாக்கி வழிகாட்டும்.

நன்மைகள்

சனி பகவான் ஒரு உக்கிரமான கடவுளே கிடையாது. அவர் நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு தகுந்த மாதிரி நமக்கு நன்மைகளையும் தண்டனைகளையும் வழங்குவார். நாம் தான் அவரை உக்கிரமான கடவுளாக சித்தரித்துள்ளோம்.

எனவே, நமது நல்ல கெட்ட விஷயங்களை பொருத்தே அவர் பார்வை இருக்கும். இருப்பினும் சில நற்செயல்கள் மூலம் அவரின் அணுகூலத்தையும் நாம் பெற இயலும்.

சனி பகவானுக்கு பிடித்தமானவை

சனிக்கிழமையில் எள் எண்ணெய் குளியல், காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். உளுந்து, கருப்பு எள்ளு இரத்தினம், கருப்பு எருது, மாடு, கருப்பு ஆடைகள், கருப்பு நிற காலணிகள் போன்றவற்றை தானமாக வழங்குதல்.

மேலும், ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்குதல். இந்த தானத்தை சனி பூஜை அன்று செய்தால் மிகவும் விசேஷம்.

பூஜையின் இறுதி நாளில் அனுமான், சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். சனி பகவானின் அருளும் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.

Lord Shani Dev Worship

Related posts

யாழில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!

Tharshi

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிவாயு நிறுவனம்..!

Tharshi

சறுக்கிய சில்வர் ஸ்க்ரீன் என்ட்ரி : மீண்டும் முருங்கை மரம் ஏறிய டிவி நடிகை..!

Tharshi

Leave a Comment