குறும்செய்திகள்

செவ்வாயன்று பால்மா கன்டேனர்கள் விடுவிப்பு : ஒருகிலோ பக்கட் 1145 ரூபா..!

Milk Powder containers released on Tuesday

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கின்ற பால்மா அடங்கிய கன்டேனர்களை வருகின்ற செவ்வாய்க்கிழமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக இந்த கன்டேனர்கள் சிக்கியிருந்தன. எனினும் மத்திய வங்கி ஆளுநர், கன்டேனர்களை விடுவிக்க தேவையான டொலர்களை அனுமதித்திருப்பதால் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்று பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், பால்மா ஒரு கிலோ பக்கட் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, புதிய விலை 1145 ரூபாவாக ஒருகிலோ பக்கட் விற்பனை செய்யப்படும் என்றும் அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Milk Powder containers released on Tuesday

Related posts

ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள்..!

Tharshi

விஷாலுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.சௌத்ரி..!

Tharshi

இந்தியா-இலங்கை 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி..!

Tharshi

Leave a Comment