குறும்செய்திகள்

05-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

5th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 05.2021

பிலவ வருடம், புரட்டாசி 19, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:04 வரை,
அதன்பின் அமாவாசை திதி, உத்திரம் நட்சத்திரம் நள்ளிரவு 2:11 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த- சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உழைப்பு, முயற்சிக்கேற்ற பலன் மட்டுமே கிடைக்கும்.
பரணி: சமீபத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மனதில் மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகளை இதமாகப் பேசி தீர்ப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி: சகோதர, சகோதரிகளின் ஆதரவு மெல்ல அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: சகோதரர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நீங்கள் செய்யும் பஞ்சாயத்துக்கள் நல்ல பலன் தரும்.
திருவாதிரை: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர்.
புனர்பூசம் 1,2,3: வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கங்கள் அகலும்.

கடகம்:

புனர்பூசம் 4: கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் அகலும்.
பூசம்: திட்டமிடாது செய்யும் செயல்களில்கூட வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம்: பெற்றோர் நோய் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.

சிம்மம் :

மகம்: வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. முன்பு இருந்த தாமதம் அகலும்.
பூரம்: விரயத்திற்கு ஏற்ற தொகை வந்துவிடும். தொழிலில் லாபம் உண்டு.
உத்திரம் 1: பரப்பான நிகழ்வுகள் இன்று நடந்து கொண்டே இருக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும், சலுகைகளும் கிடைக்கலாம்.
அஸ்தம்: எதிர்பாராத திடீர் நன்மைகளைக் காண்பீர்கள். நிம்மதியான நாள்
சித்திரை 1,2: உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் நன்மை தடையின்றி கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: பணத்தேவை ஒன்று இன்றைக்கு நல்லபடியாக பூர்த்தியாகும்.
சுவாதி: நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தினரிடையே அன்பும், ஆதரவும் பெருகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு, திருமண வாய்ப்பு கைகூடும்.
அனுஷம்: தாய்வழி ஆதரவு திருப்தி தரும். நீங்கள் கேட்ட சலுகை கிடைக்கும்.
கேட்டை: அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்து கொண்டிருந்த நன்மை கிடைக்கும்.

தனுசு:

மூலம்: பொறுமை கூடும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான நாள்.
பூராடம்: நிதானப்போக்கு மாறி நன்மைகள் விரைவாகக் கிடைக்கும்.
உத்திராடம் 1: முன்னேற்றப் பாதையில் சில இடையூறு வந்தாலும் நீங்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தந்தை வழி உறவில் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும்.
திருவோணம்: புதியவர்களை நம்பி ரிஸ்க்கில் ஈடுபட வேண்டாம்.
அவிட்டம் 1,2: பணியிடத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் வரலாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிலருக்கு பணி பற்றிய ஏமாற்றம் வந்து உடனே சரியாகும்.
சதயம்: திருப்தியளிக்காத விஷயம் பற்றி பொறுமையோடு செயல்படுங்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்ப முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும்.
உத்திரட்டாதி: முயன்ற விஷயங்கள் முன்பை விட துரிதமாக நடைபெறும்.
ரேவதி: குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். பணியிடப் பிரச்னைகள் அகலும்.

5th October Today Raasi Palankal

Related posts

எதிர்வரும் 24 , 25 ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மூலம்..!

Tharshi

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் கோரும் இலங்கை..!

Tharshi

Leave a Comment