குறும்செய்திகள்

சமந்தா நாக சைதன்யா பிரிய யார் காரணம் தெரியுமா.. : போட்டுடைத்த கங்கனா ரனாவத்..!

Kangana Ranaut reveals Samantha Naga Chaitanya broke up reason

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்ற விவகாரம் தொடர்பில், நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,

“நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரனாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார். அமீர்கானும், நாக சைதன்யாவும் “லால் சிங் சட்டா” என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை “எஸ்” என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை.

அது வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.

இதையடுத்து, தற்போது டுவிட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார்.

நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தார். தற்போது நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.

Kangana Ranaut reveals Samantha Naga Chaitanya broke up reason

Related posts

2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் : அடம் பிடிக்கும் அந்த நடிகை..!

Tharshi

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்து பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டம்..!

Tharshi

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தலில்..!

Tharshi

Leave a Comment