குறும்செய்திகள்

நேற்று உலக அளவில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 11 பதிப்பு..!

Windows 11 version released worldwide yesterday

மைக்ரோசொப்ட் கணினி இயங்குதளத்தின் அண்மைய பதிப்பான “விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.

இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பேசுகையில்..,

“விண்டோஸ் 11 அண்மைய பதிப்பு பயனருக்கு புதிய மற்றும் எளிமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.

இந்த புதிய இயங்கு முறை, தற்போதைய பயன்பாட்டு முறையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

விண்டோஸ் 11 சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது, இயல்பாக, ஸ்டார்ட் மெனு டாஸ்க்பாரில் உள்ள ஐகோன்களுடன் திரையில் மையமாக இருக்கும். ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்யும் போது, அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளின் பட்டியல் மெனுவில் தோன்றும்.

ஒரு வகையில் இது திறன்பேசி செயலிகளை திறப்பது போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கிறது. விண்டோஸ் 10இல் காணப்படும் டைல்ஸ்களை 11இல் மைக்ரோசொப்ட் கைவிட்டுள்ளது.

அத்துடன், உங்களுடைய கணிப்பொறியில் போதிய ஸ்டோரேஜ் வசதி, ப்ராசசர் வசதி இருந்தால் உங்களால் விண்டோஸ் 11 இயங்குதள பதிவிறக்க லிங்கை டவுன்லோடு செய்து உங்களுடைய கணிப்பொறி இயங்குதளத்தை எளிதாக மே்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Windows 11 version released worldwide yesterday

Related posts

உள்நாட்டு மீனவர்களிடையே இந்திய டெல்டா கொவிட் திரிபு பரவக்கூடிய அபாயம்..!

Tharshi

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி..!

Tharshi

2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடுவார் : தலைமை செயல் அதிகாரி தகவல்..!

Tharshi

Leave a Comment