குறும்செய்திகள்

12-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

12th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 12.2021

பிலவ வருடம், புரட்டாசி 26, செவ்வாய்க்கிழமை,
வளர்பிறை, சப்தமி திதி நள்ளிரவு 2:11 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, மூலம் நட்சத்திரம் மாலை 4:20 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பதவியில் மாற்றம் வரும். மனதில் நிம்மதி அதிகரிக்கும்.
பரணி: பிறர் வம்புகளில் தலையிடாமல் இருப்போருக்கு பிரச்னை இல்லை
கார்த்திகை 1: குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் படிப்படியாக மாறும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியில் கவனம் அதிகரிக்கும். வம்புகளில் ஈடுபட வேண்டாம்.
ரோகிணி: யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கடன் வாங்காதீர்கள்.
மிருகசீரிடம் 1,2: எதிர்ப்புகள் பற்றி இருந்து வந்த பயம் நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சுபநிகழ்வு பற்றிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
திருவாதிரை: குடும்பத்தில் சுப விசேஷத்துக்கான முன்னேற்பாடு நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: சுபவிரயங்கள் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: வருமானம், சேமிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம்.
பூசம்: இட மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். மனதில் தெளிவு உண்டாகும்.
ஆயில்யம்: புதிய விஷயம் கற்கும் ஆர்வம் வரும். தோற்றத்தில் பொலிவு கூடும்.

சிம்மம் :

மகம்: பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள். கலகலப்பான நாள்
பூரம்: குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட அவகாசம் கிடைக்கும்.
உத்திரம் 1: வேலைப்பளு குறைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சேமிப்பு, வருமானம் பற்றிய அக்கறை கூடுதலாகும்.
அஸ்தம்: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். மனதில் இருந்த பயம் தீரும்.
சித்திரை 1,2: சிறுபழுதுகள் காரணமாகச் சில செலவுகள் வரலாம்.

துலாம்:

சித்திரை 3,4: கருணை காரணமாக இன்று நல்ல விஷயங்களை செய்வீர்கள்.
சுவாதி: சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அகலும். கவர்ச்சி கூடும்.
விசாகம் 1,2,3: அழகுணர்ச்சியுடன் சில செயல்களை செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்களின் செல்வாக்கு கூடும். அலங்கார சாதனங்கள் வாங்குவீர்கள்.
அனுஷம்: செலவுகளைக் கட்டுப்படுத்தும் எண்ணம் தோன்றும்.
கேட்டை: வெளியூரிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நல்ல செய்தி வரும்.

தனுசு:

மூலம்: நேர விரயத்தை கட்டுப்படுத்துவீர்கள். கற்பனை பயம் வேண்டாம்.
பூராடம்: உறவினர்கள் இடையே பாலமாக இருப்பீர்கள். நிதானப்போக்கு இருக்கும்.
உத்திராடம் 1: தன்னிம்பிக்கை கூடும். உடல் உழைப்பு அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இன்று நன்மை வரும்.
திருவோணம்: திருமண வாய்ப்பு கைகூடும். மனதில் இருந்த கவலைகள் தீரும்.
அவிட்டம் 1,2: வீடு விற்பனை, வாடகை மூலம் வருமானம் வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனதில் தெளிவு பிறக்கும். ஆன்மிகப் பணியில் ஈடுபாடு உண்டாகும்.
சதயம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: உறவினர்களிடம் எதிர்பார்த்த அளவு அன்பு கிடைக்காது.

மீனம்:

பூரட்டாதி 4: பாராட்டு கிடைக்கும். தடைகளும் தாமதங்களும் நீங்கும்.
உத்திரட்டாதி: பகையை வெல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு வரும்.
ரேவதி: பலகாலம் எதிர்பார்த்திருந்த நல்ல விஷயம் ஒன்று நடைபெறும்.

12th October Today Raasi Palankal

Related posts

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சிறைத்தண்டனை : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை..!

Tharshi

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மீண்டும் தலைவரானார் ரஷித்..!

Tharshi

நம்ம காதல் தெய்வீக காதல்டா….!

Tharshi

Leave a Comment