குறும்செய்திகள்

14-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

14th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 14.2021

பிலவ வருடம், புரட்டாசி 28, வியாழக்கிழமை,
வளர்பிறை, நவமி திதி இரவு 10:25 வரை,
அதன்பின் தசமி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1:47 வரை,
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 10:30 – 12:00 மணி), திருவோண விரதம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நண்பர்கள், குடும்பத்தினரால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள்.
பரணி: கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொண்டு செயல்படுவீர்கள்.
கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணம் லாபம் தரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: பணியிட மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிருகசீரிடம் 1,2: பேச்சிலும் செயலிலும் இன்று மிகுந்த கவனம் தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: யாரைப் பற்றியும் யாரிடமும் புறம்கூற வேண்டாம்.
திருவாதிரை: நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்றிருந்தால் பிரச்னை இருக்காது.
புனர்பூசம் 1,2,3: முன்னேற்றம் ஏற்படும். பொறாமைக்காரர்களைப் புறக்கணியுங்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: குடும்ப ஒற்றுமையை காக்க எடுத்த முயற்சிகள் கைகூடும்.
பூசம்: முன்பு கண்ட நல்ல கனவுகள் இப்போது மெய்ப்பட ஆரம்பிக்கும்.
ஆயில்யம்: கோபதாபங்களைக் குறைத்து மற்றவர் அன்புக்குப் பாத்திரமாவீர்கள்.

சிம்மம் :

மகம்: பிரிந்தவர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சி பலிக்கும்.
பூரம்: சம்பாதிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பொதுசேவை செய்வீர்கள்.
உத்திரம் 1: குழந்தைகளின் செயல் உங்களை சந்தோஷப்பட வைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தவறான பாதைக்கு அழைக்கும் நண்பர்களை விலக்குங்கள்.
அஸ்தம்: தொழில், பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
சித்திரை 1,2: கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும். மனமகிழ்ச்சி உண்டு.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பார்ப்பு இல்லாமல் நண்பர்கள் உங்களுக்கு நன்மை செய்வர்.
சுவாதி: உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு அதிகமாகும்.
விசாகம் 1,2,3: சகோதரர்களின் பாராமுகம் வருத்தமளிக்கும். நிதி நிலை உயரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணியிட வளர்ச்சி கூடும். வழக்குகள் சாதகமாகும். பயம் தீரும்.
அனுஷம்: அக்கம்பக்கத்தினருக்கு உதவி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
கேட்டை: நீங்கள் நினைத்த விஷயம் ஒன்று நிறைவேற வாரிசுகள் உதவுவர்.

தனுசு:

மூலம்: பெரிய மனிதர்களின் ஆதரவு பிரச்னைகளை குறைக்கும்.
பூராடம்: உங்களின் செயல் பெற்றோருக்கு நெகிழ்ச்சி அளிக்கும்.
உத்திராடம் 1: வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் ஒட்டுதல் ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: களைப்பு காரணமாக கடமை தவற வேண்டாம்.
திருவோணம்: அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
அவிட்டம் 1,2: பண விஷயத்தில் நெருங்கியவர்களிடமும் கவனம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: பிறருக்கு நன்மை செய்வதாக நினைத்து சங்கடத்தில் மாட்ட வேண்டாம்.
சதயம்: தவறு ஒன்றை செய்து அதிலிருந்து மீளுவீர்கள். மன பயம் நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: பணியில் ஏற்படும் முன்னேற்றத்தால் பிறர் பொறாமையடைவர்.

மீனம்:

பூரட்டாதி 4: மிக நெருக்கமான ஒருவரின் சிரமம் பற்றி கவலை தீரும்.
உத்திரட்டாதி: மனக்குறை ஒன்று நீங்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள்.
ரேவதி: மற்றவருக்கு கற்பிப்பதன் மூலம் வருமானம் உண்டு.

14th October Today Raasi Palankal

Related posts

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

உலகமெங்கும் 85 நாடுகளுக்கு பரவியுள்ள டெல்டா வைரஸ் : எச்சரிக்கை தகவல்..!

Tharshi

காதலர்களுக்குள் நிகழ்ந்த காமெடி பேச்சுவார்த்தை : செம்ம உருட்டு..!

Tharshi

Leave a Comment