குறும்செய்திகள்

15-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

15th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 15.2021

பிலவ வருடம், புரட்டாசி 29, வெள்ளிக்கிழமை,
15.10.2021, வளர்பிறை, தசமி திதி இரவு 9:00 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 12:56 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : விஜயதசமி, ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம், கரிநாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பெரியவர்கள் மூலம் இன்று நன்மை அடைவீர்கள்.
பரணி: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பல பணிகளை கவனிப்பீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்க முயற்சி எடுப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பண வரவும், செல்வாக்கும் மேலோங்கி மகிழ்சி தரும்.
ரோகிணி: கூடுதல் செலவு ஒன்று இருக்கும். குதுாகலமான நாள்
மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணையின் உடல்நலம் மேம்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியாளர்களுக்கு வேலைச்சுமை குறையும். யோகமான நாள்.
திருவாதிரை: பிறரின் மனம் புண்படப்பேசி அதன் மூலம் சிரமப்பட வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகளிடம் சற்றுப் பொறுமையுடன் நடப்பது நல்லது.

கடகம்:

புனர்பூசம் 4: எதிராளியை புரிந்துகொள்ள முயற்சித்து சிரமத்திலிருந்து தப்பலாம்.
பூசம்: நண்பர்கள், உறவினர்களின் வருகை மிகுந்த நன்மை தரும்
ஆயில்யம்: உங்களின் செயல்பாடுகள் பணியிடத்தில் மதிப்பை ஏற்படுத்தும்.

சிம்மம் :

மகம்: பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கோபம் குறையும்.
பூரம்: பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 1: உங்கள் மேல் மற்றவர்களுக்கு இருந்த மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: புதிய பொறுப்புகளும், பதவிகளும் வரும். குடும்ப மகிழ்ச்சி கூடும்.
அஸ்தம்: பலநாட்களாக மனதில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கும்.
சித்திரை 1,2: பணியிடத்தில் புதிய நபர்களின் வரவுகள் இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: உங்களின் திறமைகள் கூடும். பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
சுவாதி: பணியில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: சாப்பிட, துாங்க நேரமின்றி உழைக்க வேண்டி வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: உடல் நலத்தைப் பேணி சிரமத்தில் இருந்து மீளுவீர்கள்.
அனுஷம்: நீண்ட நாளாக தேடிக்கொண்டிருந்த முக்கியப் பொருள் கிடைக்கும்
கேட்டை: மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்.

தனுசு:

மூலம்: பண விவகாரங்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
பூராடம்: பிறருக்கு உதவி செய்து உயர்வீர்கள். பணியிடத்தில் உங்கள் கை ஓங்கும்.
உத்திராடம் 1: கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பணியில் அதிக கவனம் தேவைப்படும். அமைதியான நாள்.
திருவோணம்: மனதுக்குப் பிடித்தவரை பல காலம் கழித்துச் சந்திப்பீர்கள்
அவிட்டம் 1,2: யாருக்கும் மத்யஸ்தம் செய்வதற்காக முயல வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனதை அரித்த கவலை நீங்கும்.
சதயம்: ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. கலகலப்பான நாள்.
பூரட்டாதி 1,2,3: எதையும் ஒருமுறைக்குப் பலமுறை முயன்றே முடிப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் உடனிருப்பவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.
உத்திரட்டாதி: நீங்கள் மதிக்கும் பிரபலத்தின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும்
ரேவதி: ஆரோக்கியம் பற்றிய கற்பனை பயம் நீங்கி நிம்மதி பிறக்கும்.

15th October Today Raasi Palankal

Related posts

நேபாளத்தில் நிலச்சரிவு – வெள்ளம் : 16 பேர் உயிரிழப்பு..!

Tharshi

அசைவ உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா..!

Tharshi

21-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment