குறும்செய்திகள்

16-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

16th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 16.2021

பிலவ வருடம், புரட்டாசி 30, சனிக்கிழமை,
வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 8:01 வரை,
அதன்பின் துவாதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 12:28 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : ஏகாதசி விரதம், கொலு எடுக்க காலை 7:31 – 9:00 மணி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: இலக்கை நோக்கி முன்பைவிட வேகமாக முன்னேறுவீர்கள்.
பரணி: உங்களால் பயன் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஆதரிப்பர்.
கார்த்திகை 1: பழைய நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேறுவீர்கள். பய உணர்வு நீங்கும்.
ரோகிணி: எதிர்நோக்கியிருக்கும் சவால்களை முடித்து மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: முன்பு கை நழுவிப்போன வெற்றியை அடைவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மற்றவர் பிரச்னைகள் தீர உதவியாக இருப்பீர்கள்.
திருவாதிரை: முன்பு இருந்த குற்ற உணர்வு நீங்கும்படியாக நடப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பிறரது விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் ஜெயிப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பேச்சினால் பிரச்னை வராமல் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
பூசம்: மற்றவர் மனம் நோகும்படியான பேச்சோ, செயலோ வேண்டாம்.
ஆயில்யம்: புதிய சாதனை ஒன்றால் மற்றவர்களுக்கு வியப்பூட்டுவீர்கள்.

சிம்மம் :

மகம்: மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.
பூரம்: மனு செய்திருந்த கடன் தொகை சுலபமாகக் கிடைக்கும்.
உத்திரம் 1: வாக்கு வன்மையால் ஜெயித்து நன்மை ஒன்றை அடைவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தைரியம் அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும்.
அஸ்தம்: கூடுதலாக உழைத்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.
சித்திரை 1,2: நண்பர்களால் நிம்மதி கிடைக்கும். பயம் நீங்கும்.

துலாம்:

சித்திரை 3,4: நண்பர்கள் இடையே வெளி நபர்களால் ஏற்பட்ட குழப்பம் தீரும்.
சுவாதி: சுபநிகழ்வு தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடக்கூடும்
விசாகம் 1,2,3: இளைஞர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: தேவையற்ற கோபங்கள் குறையும். வெற்றி வாய்ப்பு கூடும்.
அனுஷம்: அலுவலகத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உழைப்பு கூடும்.
கேட்டை: பொது விவகாரத்தில் ஈடுபட்டு புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

தனுசு:

மூலம்: சாதுர்யமாக செயல்பட்டு சிரமங்களில் இருந்து மீளுவீர்கள்.
பூராடம்: தவறானவர்களின் ஆலோசனைகளை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.
உத்திராடம் 1: திட்டமிட்ட பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படலாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சிறு தவறால் முன்னேற்றம் தாமதமாவதற்கு வாய்ப்புள்ளது.
திருவோணம்: புதியவர்கள் நட்பு பற்றி சற்று கவனமாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1,2: பெண்கள் குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வார்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனத்துடன் செயல்பட்டால் சுலபமாக வெற்றி பெறலாம்.
சதயம்: கலவையான பலன்கள் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உதவும்.
பூரட்டாதி 1,2,3: தடைகளையும், தாமதங்களையும் விடாமுயற்சியால் வெல்வீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: புதிய வாகனம் வாங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உடல் ஆரோக்கியம் பற்றி இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
ரேவதி: சிறு பயணம் வெற்றி தரும். புதிய துறையில் ஆர்வம் வரும்.

16th October Today Raasi Palankal

Related posts

ஓய்வு பெறும் ஏரன் ஃபின்ச்..!

Tharshi

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கரீனா கபூர்..!

Tharshi

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment