குறும்செய்திகள்

18-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

18th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 18.2021

பிலவ வருடம், ஐப்பசி 1, திங்கட்கிழமை,
வளர்பிறை, திரயோதசி திதி இரவு 7:26 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 12:54 வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : பிரதோஷம், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உங்கள்மீது மற்றவர்கள் கொண்ட மதிப்பு உயரும் நாள்.
பரணி: தொலை துாரத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும்.
கார்த்திகை 1: உங்களின் முயற்சிக்கு மாற்று இனத்தோர் ஒத்துழைப்பு செய்வர்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். உற்சாகமான நாள்.
ரோகிணி: மகிழ்ச்சி கூடும். நினைத்த விஷயம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனதில் பல காலம் கனவு கண்ட தேவை ஒன்று நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.
திருவாதிரை: வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய பங்கு முறையாகக் கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: பல நாட்கள் வராதிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: கடன் சுமையை முனைப்புடன் பெருமளவு குறைப்பீர்கள்.
பூசம்: அழகிய, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆயில்யம்: மற்றவர்கள் குற்றம் சாட்டக்கூடிய எதையும் செய்யாதீர்கள்.

சிம்மம் :

மகம்: அவசரமோ பதற்றமோ இல்லாமல் எதையும் செய்யப்பாருங்கள்.
பூரம்: சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று நன்மை தருவதாக அமையும்.
உத்திரம் 1: நண்பருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சிறு சலசலப்பு ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: இன்று நல்ல பலன் ஒன்று உங்களுக்கு வரப்போகின்றது.
அஸ்தம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உறுதி கொள்வது நன்று.
சித்திரை 1,2: நேர்மையை விடாமல் செயல்பட்டு நிம்மதி அடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: கொள்கைப்பிடிப்போடு செயல்படுவதில் உறுதி தேவை.
சுவாதி: குழந்தைகளுக்கு முன்னேற்றங்கள் வந்து உங்களை மகிழ்விக்கும்.
விசாகம் 1,2,3: தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய திருப்பம் ஒன்றைக் காண்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: மகிழ்ச்சி தரும் செலவுகள் திடீரென அதிகரிக்கலாம்.
அனுஷம்: வரன் தேடும் சலிப்பு நீங்கும். சந்திப்பு ஒன்று சந்தோஷம் தரும்.
கேட்டை: வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவதால் நிம்மதி பிறக்கும்.

தனுசு:

மூலம்: புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. கற்பனைக் கவலை தீரும்.
பூராடம்: குழந்தைகளின் போக்கில் மகிழ்ச்சி அளிக்கும் மாற்றம் ஏற்படும்.
உத்திராடம் 1: படிப்பிற்கேற்ற பணி கிடைக்கும். பிறருடன் அனுசரித்து செல்லவும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பெண்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: பொழுதுபோக்கில் கவனம் செலுத்தி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: நாள் முழுக்க பிஸியாக இருப்பீர்கள். கவலை தீரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வருமானம் உயர நேர்மையற்ற வழியை நாட வேண்டாம்.
சதயம்: நாளின் முற்பகுதியில் உற்சாகமான செய்தி வரும். மன அமைதி உண்டு.
பூரட்டாதி 1,2,3: பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: சிறு சங்கடம் ஒன்று ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பல நாள் சந்திக்காத நபர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரேவதி: தன்னம்பிக்கையை கைவிட வேண்டாம். வேலைப்பளுமிக்க நாள்.

18th October Today Raasi Palankal

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சுட்ட வெண்டைக்காய் சாலட்..!

Tharshi

இந்தியாவுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பிசிசிஐ..!

Tharshi

குழந்தைகளின் பார்வைத்திறனை பெரிதளவில் பாதிக்கும் ஆன்லைன் பயன்பாடு..!

Tharshi

1 comment

Leave a Comment