குறும்செய்திகள்

19-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

19th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 19.2021

பிலவ வருடம், ஐப்பசி 2, செவ்வாய்க்கிழமை,
வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:55 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:52 வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த- சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு, மிலாடி நபி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தடை ஒன்று நீங்கி வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
பரணி: மகிழ்ச்சி கூடும். தேவையற்ற கற்பனை பயங்கள் நீங்கும்.
கார்த்திகை 1: பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அரசாங்க நன்மை வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் உயர் அதிகாரியின் பாராட்டுக் கிடைக்கும்.
ரோகிணி: குழந்தைகளால் ஏற்பட்ட சிரமம் அவர்களாலேயே நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த நன்மை உண்டு. சம்பள உயர்வு அறிவிக்கப்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியிட முன்னேற்ற வாய்ப்பு ஒன்று கைகூடும்.
திருவாதிரை: செய்தொழில் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.
புனர்பூசம் 1,2,3: தாய்வழி உறவினர் ஒருவரால் நன்மை ஏற்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: வீடு கட்டும் முயற்சி கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூசம்: பெற்றோருக்கு ஏற்பட்ட பிரச்னை நீங்குவதால் குடும்பம் மகிழும்.
ஆயில்யம்: கருணை காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்புக் காட்ட வேண்டாம்.

சிம்மம் :

மகம்: பெரிய விஷயம் எதையும் இன்றைக்கு ஆரம்பிக்க வேண்டாம்.
பூரம்: உங்களை நம்பிய ஒருவரின் ரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டாம்.
உத்திரம் 1: தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பிரச்னை ஒன்று தீரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அஸ்தம்: பணம் எண்ணும்போது மிகுந்த கவனம் தேவை. பரபரப்பான நாள்.
சித்திரை 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

துலாம்:

சித்திரை 3,4: அந்தஸ்த்து உயரும். உடன்பிறந்தவர்களால் சில செலவுகள் உண்டு.
சுவாதி: எதிர்மறையாகப் பேசியவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
விசாகம் 1,2,3: உறவினர் வீட்டு சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பணிவும், துணிவும் உங்கள் வெற்றிக்கு வித்திடும்.
அனுஷம்: சுபநிகழ்ச்சி ஒன்றை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவீர்கள்.
கேட்டை: வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டு.

தனுசு:

மூலம்: உடல்நலம் மேம்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும்.
பூராடம்: மற்றவர் பணத்தைக் கையாள்கையில் எச்சரிக்கை தேவை.
உத்திராடம் 1: வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தொழிலில் முன்னேற்றம் உண்டு. கேட்ட பணம் கிடைக்கும்.
திருவோணம்: பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 1,2: பொதுவாழ்வில் ஈடுபாடு வரும். மனநிறைவு கூடும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சதயம்: உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: நிதி நிலைமை நன்றாக இருக்கும். தந்தைக்கு நலன் விளையும்.

மீனம்:

பூரட்டாதி 4: ஆரோக்கிய பிரச்னை நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பணி முயற்சியை தொடங்கலாம். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு.
ரேவதி: நல்ல வழிகாட்டி கிடைப்பர். தொழிலில் லாபம் வரும்.

19th October Today Raasi Palankal

Related posts

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

Tharshi

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி..!

Tharshi

சிம்புவின் “மஹா” படத்துக்கு கோர்ட் தடையா..?

Tharshi

Leave a Comment