குறும்செய்திகள்

நீர்கொழும்பு கடற்கரை பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு..!

Recovery of the body of a missing Child In the Negombo beach

நீர்கொழும்பு – துன்கல்பிட்டிய கடலில், கடந்த 18 ம் திகதி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன சிறுமி சிலாபம் இரணவில கடற்கரை பகுதியில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, துன்கல்பிட்டிய, அளுத்குருவ மீனவ கிராமத்தைச் சேர்ந்த தமாஷா ரொஷாலி எனும் இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

கடந்த 18 ம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோர்கள் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் விறகுக்காக மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது சிறுமி கடலில் விளையாடிக் கொண்டிருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடற்கரை ௐரத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடல் அலை அடித்துச் செல்வதாக ஒருவர் கூக்குரலிட்டு பெற்றோர்களை அழைத்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பொலிஸார், கடற்படையினரின் உதவியுடன் கடலில் காணாமல் போன சிறுமியை தேடினர்.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி காணாமல் போன சிறுமி நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் துன்கல்பிட்டிய மற்றும் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recovery of the body of a missing Child In the Negombo beach

Related posts

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

24-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களுக்கும் வரி : பந்துல குணவர்தன..!

Tharshi

1 comment

Leave a Comment