குறும்செய்திகள்

23-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

23rd October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 23.2021

பிலவ வருடம், ஐப்பசி 6, சனிக்கிழமை,
தேய்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 2:05 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 9:54 வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு, கரிநாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நன்மை ஏற்படும். வரவுக்கு மிஞ்சிய செலவை தவிர்க்கவும்.
பரணி: வீடு மாற்றம் இப்போதைக்கு இல்லை. நல்லோர் நட்பு கிடைக்கும்.
கார்த்திகை 1: பணியாளர்களுக்கு நன்மை ஒன்று நிகழும். மகிழ்வான நாள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எந்தச் செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: ஒற்றுமையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் பகை நீங்குவதால் மனதில் நிம்மதி நிலவும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நண்பர்கள் மூலம் உள்ளம் மகிழும். நல்ல செய்தி ஒன்று வரலாம்.
திருவாதிரை: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய விஷயங்கள் கற்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: வாழ்க்கைத் தேவைகளில் ஒன்று இன்றைக்கு நிறைவேறும்.
பூசம்: பணப் பற்றாக்குறை அகலும். உறவினரால் நன்மை கிடைக்கும்.
ஆயில்யம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

சிம்மம் :

மகம்: மற்றவர் பழிக்கும் செயல் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரம்: சேமிப்பு உயரும். புதிய திட்டம் உருவாகி அது நிறைவேறும்.
உத்திரம் 1: இளைஞர்கள் உயர்கல்வி, பணி குறித்த புதிய ஐடியா செய்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.
அஸ்தம்: பெண்களால் நன்மை ஒன்று நிகழும். மனக்குழப்பம் நீங்கும்.
சித்திரை 1,2: கலைத்துறையை சேர்ந்தவர்களின் கனவு நனவாகும் நாள்.

துலாம்:

சித்திரை 3,4: மனதுக்கு நெருக்கமானவரிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
சுவாதி: புதிய நட்பு ஒன்று ஏற்படும். முழு ஈடுபாட்டுடன் உழைப்பீர்கள்.
விசாகம் 1,2,3: அலுவலகத்தில் நிலவிய சிறு பிரச்னைகள் தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அனுஷம்: கடன் பிரச்னைகள் தீரும். மன அமைதி மீளும்.
கேட்டை: கலைத்துறையில் கால் பதிக்கும் ஆர்வம் ஏற்படும்.

தனுசு:

மூலம்: தேவையற்ற பயம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.
பூராடம்: ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசுங்கள்.
உத்திராடம் 1: வீண் பழி வராதவாறு கவனம் தேவை. பணியில் அலட்சியம் வேண்டாம்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குழந்தைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவோணம்: வழக்கு விஷயங்கள் தள்ளிப்போகும். கவலை வேண்டாம்.
அவிட்டம் 1,2: அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நேர்மையுடன் உழைப்போருக்கு பணியிடத்தில் நல்ல செய்தி உண்டு.
சதயம்: மனதில் இருந்த சலிப்பு அகலும். எதிர்பாராத ஒரு வேலை முடியும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பம் மகிழும். வியாபாரத்தில் சிறிது லாபம் அடைவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: சகஊழியர்கள் உங்களை ஆதரிப்பார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: இளைஞர்கள் உழைப்பால் உயரும் நாள். சுபச்செலவு கூடும்.
ரேவதி: வருமானம் உயரும். முதலீடுகள் அதிகரிக்கும். அமைதியான நாள்.

23rd October Today Raasi Palankal

Related posts

உலகிலேயே அதிக திருமணம் செய்த 94 குழந்தைகளின் தந்தை மரணம்..!

Tharshi

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்..!

Tharshi

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

1 comment

Leave a Comment