குறும்செய்திகள்

24-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

24th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 24.2021

பிலவ வருடம், ஐப்பசி 7, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தி திதி நாளை அதிகாலை 4:10 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, ரோகிணி நட்சத்திரம் நள்ளிரவு 12:28 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தாய் வழி உறவினர்களுடன் சந்தோஷமாக பொழுது போகும்.
பரணி: நண்பர்களிடம் விட்டுகொடுத்து சென்று நட்பை தக்கவைப்பீர்கள்.
கார்த்திகை 1: உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
ரோகிணி: முதலீடுகளை ஆராய்ந்து செய்யவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
மிருகசீரிடம் 1,2: வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொறுப்புகள் கூடும்.
திருவாதிரை: நீண்ட நாளாக விரும்பிய ஆடம்பரப் பொருளின் சேர்க்கை உண்டு.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் பயந்தவாறு காத்திருந்த பயணம் இப்போதைக்கு இல்லை.

கடகம்:

புனர்பூசம் 4: கடந்த நாட்களில் இருந்த சலிப்பு நீங்கும். உற்சாகம் கூடும்.
பூசம்: வியாபாரிகளுக்கு புதிய நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.
ஆயில்யம்: பணியாளர்களுக்கு ஆதாயம் உண்டு. கையொப்பமிடுவதில் கவனம் தேவை.

சிம்மம் :

மகம்: மற்றவர் பழிக்கும் செயல் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரம்: சேமிப்பு உயரும். புதிய திட்டம் உருவாகி அது நிறைவேறும்.
உத்திரம் 1: இளைஞர்கள் உயர்கல்வி, பணி குறித்த புதிய ஐடியா செய்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி செய்த விஷயங்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும்.
அஸ்தம்: பணியாளர்கள், மாணவர்களின் திறமை இன்று வெளிப்படும்.
சித்திரை 1,2: திடீர் நன்மை உண்டு. சொத்து விஷயத்தில் கவனம் தேவை.

துலாம்:

சித்திரை 3,4: பணியார்களுக்கு பாராட்டு கிடைக்கும். குழந்தைகளால் பெருமிதம் வரும்.
சுவாதி: புதிய மனிதர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
விசாகம் 1,2,3: ரகசியங்களை பகிர்வதால் தொல்லை ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

விசாகம் 4: ஆபத்தான விஷயங்களில் தேவையில்லாமல் இறங்காதீர்கள்.
அனுஷம்: பாஸ்போர்ட், விசா தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கேட்டை: மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்று நடைபெறும்.

தனுசு:

மூலம்: மாணவர்கள் சிறப்பாக பாராட்டு பெறுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
பூராடம்: வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம் 1: மனதில் தேவையற்ற கவலைகள் நெருங்க அனுமதிக்காதீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
திருவோணம்: நிரந்தர முதலீடுகள் செய்வது பற்றிய வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: சொத்துக்கள் வாங்குவது, விற்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உழைப்பின் அளவுக்கு ஏற்ப நல்ல பலன் பெறுவீர்கள்.
சதயம்: முயற்சிகளில் சற்றுத் தாமதமாகவே வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் கடந்த சில நாட்களாக இருந்த வருத்தம் தீரும்.

மீனம்:

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். பிரிந்து சென்ற நண்பருடன் நெருக்கம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
ரேவதி: அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்வீர்கள். பிறரை மகிழ்வித்து மகிழ்வீர்கள்.

24th October Today Raasi Palankal

Related posts

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Tharshi

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்..!

Tharshi

18-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment