குறும்செய்திகள்

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை..!

Dismissal of Batticaloa police officer

மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் மாஅதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமைபுரிபவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Dismissal of Batticaloa police officer

Related posts

ட்விட்டர் தளத்தில் மீண்டும் புளூ டிக் அம்சம்..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு..?

Tharshi

Leave a Comment