குறும்செய்திகள்

27-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

27th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 27.2021

பிலவ வருடம், ஐப்பசி 10, புதன்கிழமை,
தேய்பிறை, சஷ்டி திதி காலை 7:54 வரை,
அதன்பின் சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வயிறு சம்பந்தமான பிரச்னை அனைத்தும் சரியாகும்.
பரணி: குதுாகலம் கூடும். அரசு சம்பந்தபட்ட வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை 1: பெரிய முதலீட்டைத் தவிர்க்கவும். வழக்கு வெற்றியை நோக்கிச் செல்லும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: கடந்த சில நாட்களாக இருந்து வந்த பணிச்சுமை குறையும்.
ரோகிணி: நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: அக்கம்பக்கத்தினரால் இருந்து வந்த தொல்லை தீரும்.c

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: கடுமையான முயற்சி காரணமாக வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை: புதிய விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டு அதை கற்றுக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உடல்நலத்தில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரிவடையும்.

கடகம்:

புனர்பூசம் 4: பிரச்னைகள் ஏற்படாதபடி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
பூசம்: பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னைகள் முடிவடையும்.
ஆயில்யம்: பணியிடமாற்றம் பற்றிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்

சிம்மம் :

மகம்: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபம் கிடைக்கும்.
பூரம்: திட்டமிட்ட பயணம் தள்ளிப்போவதால் நன்மை விளையும்.
உத்திரம் 1: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நீண்ட கால தடை விலகி நல்ல பணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்
அஸ்தம்: வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்ய இன்று உகந்த நாள்.
சித்திரை 1,2: பல காலம் தட்டிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

துலாம்:

சித்திரை 3,4: பணியிடத்தில் உங்களால் கலகலப்பான சூழல் உருவாகும்.
சுவாதி: எதிர்பாலினத்தவரின் நட்பால் நன்மை அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: நவீன மின்சார சாதனம் ஒன்றை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: பொழுது போக்குகளில் ஈடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.
கேட்டை: அலுவலகத்தில் இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த பிரச்னையை தீர்ப்பீர்கள்.

தனுசு:

மூலம்: மற்றவர்களுடன் விவாதிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.
பூராடம்: பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்காதீர்கள். யாரையும் பகைக்க வேண்டாம்.
உத்திராடம் 1: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகி மகிழ்ச்சி தரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்களின் திட்டத்தை செயலாக்குவதற்காக யாரையும் பகைக்க வேண்டாம்.
திருவோணம்: குழந்தைகளுக்கும், வாழ்க்கைத் துணைக்கும் நன்மை ஏற்படும்.
அவிட்டம் 1,2: மனதில் அநாவசிய பயம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு வெல்வீர்கள்.
சதயம்: சகஊழியர்களுடன் வீண் வம்பு வராதபடி கவனமாக பேசுங்கள்.
பூரட்டாதி 1,2,3: உங்களால் சமாளிக்கக்கூடிய அளவு பொருளாதாரப் பிரச்னைகள் வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: உடன்பிறந்தவர்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்புண்டு
உத்திரட்டாதி: இளைஞர்கள் எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.
ரேவதி: மகிழ்ச்சி ஏற்படும்படியான சூழல் உருவாகும். உங்களின் கடமையை நிறைவேற்றுவீர்கள்.

27th October Today Raasi Palankal

Related posts

செல்போனுக்கு அடிமையாகும் இன்றைய சிறுவர்கள்..!

Tharshi

10-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று பாலியல் புகார்..!

Tharshi

1 comment

Leave a Comment