குறும்செய்திகள்

31-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 31.2021

பிலவ வருடம், ஐப்பசி 14, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, தசமி திதி காலை 10:33 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : சூரியபகவான் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நன்மைகள் நடைபெறும் நாள். போட்டி, பொறாமை நீங்கும்.
பரணி: எடுத்த விஷயத்தை எளிதில் முடித்து நிம்மதி காண்பீர்கள்
கார்த்திகை 1: மற்றவர் பொறாமையால் ஏற்பட்ட பிரச்னைகள் சுலபமாக தீரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முயற்சியில் இனிய திருப்பம் உண்டாகி உங்களை மகிழ்விக்கும்.
ரோகிணி: வழக்கமான பணியில் திடீர் மாற்றத்தைச் செய்து வெல்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகமாகும். வெளிமனிதர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முயற்சியில் நீங்கள் நினைத்ததைவிட தாமதமான பலன் கிடைக்கும்.
திருவாதிரை: நேர்மையாக வியாபாரம் செய்து வாடிக்கையாளர்களை மகிழ்விப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிறப்பு குணத்தால் பல விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பூசம்: முன்பைவிட ஆரோக்கியம் சீராகும். நல்லவர் தொடர்பு நீடிக்கும்.
ஆயில்யம்: முடிவுக்கு வராமல் இழுபறியாக இருந்த விஷயம் சுமுகமாக முடியும்.

சிம்மம் :

மகம்: பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். நட்பு வட்டம் விரியும்.
பூரம்: உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
உத்திரம் 1: தொழிலில் நிலைமைகள் மேம்படும். லாபம் கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள்.
அஸ்தம்: மனதில் ஏதேனும் கவலை உண்டாகி அது இன்றே தீரும்.
சித்திரை 1,2: உடற்சோர்வு வரலாம். வாகனம் தொடர்பான செலவுகள் குறையும்.

துலாம்:

சித்திரை 3,4: புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் நன்மையும் உண்டாகும்.
சுவாதி: கலகலப்பான நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: கடந்த சில நாட்களாக இருந்து வந்த சிறு பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபார விருத்திக்கு உங்கள் பேச்சு கைகொடுக்கும்.
அனுஷம்: பொழுதுபோக்கான விஷயங்களில் மனம் ஈடுபடும்.
கேட்டை: முன்பு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து இன்று விடுபடுவீர்கள்.

தனுசு:

மூலம்: பணியிடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொருளாதார பிரச்னை குறையும்.
பூராடம்: தடைபட்டிருந்த பணிகளை இன்று நல்லபடியாக முடிப்பீர்கள்.
உத்திராடம் 1: அலுவலக நண்பர்களின் ஒத்துழைப்பினால் ஆதாயம் உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: ரகசியத்தைப் பரப்பினால் பிரச்னை உருவாகக்கூடும். கவனம் தேவை.
திருவோணம்: உறவினர் பகை அகலும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: மற்றவர்களுடைய மனம் நோகாதபடி கவனமாக பேசுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: திட்டங்கள் வகுப்பதில் அலட்சியம் காட்டாதிருப்பது நல்லது.
சதயம்: செலவுகளால் தடுமாற்றம் ஏற்படாமல் உறுதியாக இருங்கள்.
பூரட்டாதி 1,2,3: பயணங்களை முன்கூட்டியே சரியாகத் திட்டமிடுவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்
உத்திரட்டாதி: பணியிடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
ரேவதி: உங்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

31st October Today Raasi Palankal

Related posts

விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா..!

Tharshi

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு..!

Tharshi

11.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment