குறும்செய்திகள்

02-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

02nd November Today Raasi Palankal

இன்று நவம்பர் 02,2021

பிலவ வருடம், ஐப்பசி 16, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, துவாதசி திதி காலை 8:57 வரை,
அதன்பின் திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 10:00 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு, கல்லறை திருநாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: கலகலப்பான நாள். உங்களின் முயற்சிக்கு நல்லோர் ஒத்துழைப்பு உண்டு.
பரணி: எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள்.
கார்த்திகை 1: வியாபார முன்னேற்றம் உண்டு. பயம் ஒன்று தீரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் சேமிப்பு இன்று கைகொடுக்கும். மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: உடன்பிறப்புகளின் குடும்பத்து நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: மனம் மகிழும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறக்கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வழக்கு ஒன்று முடிவுக்கு வரும். நிம்மதி ஏற்படும்.
திருவாதிரை: நினைத்தது நிறைவேறும். பழைய முதலீடு லாபம் தரும்.
புனர்பூசம் 1,2,3: நீடித்த பிரச்னைக்குத் தீர்வு ஒன்று கிடைத்து மகிழ்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: தொழில், பணியிட வளர்ச்சிக்கு நீங்கள் செய்த முயற்சி பலிக்கும்.
பூசம்: நீண்ட நாளாக பார்க்க விரும்பிய ஒருவரின் சந்திப்பு கிடைக்கும்.
ஆயில்யம்: நேற்று செய்ய மறந்த விஷயம் ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.

சிம்மம் :

மகம்: சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர் உங்களுக்கு உதவுவார்.
பூரம்: கலைஞர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் அகலும்.
உத்திரம் 1: கடன் பிரச்னை முடிவுக்கு வரும். தீய நண்பர்களை விலக்குவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும்.
அஸ்தம்: குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சீராகி நிம்மதி ஏற்படும்.
சித்திரை 1,2: வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் பற்றிய பயம் தீரும்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்திற்குள் இருந்த மனக்கசப்பு மாறும். நிம்மதி வரும்.
சுவாதி: மாணவர்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
விசாகம் 1,2,3: உங்களின் கவர்ச்சி அம்சம் காரணமாக செல்வாக்கு அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கல்வி தொடர்பான செலவு கூடும். சந்தோஷம் அதிகரிக்கும்.
அனுஷம்: எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.
கேட்டை: வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

தனுசு:

மூலம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களை மகிழ்விப்பீர்கள்.
பூராடம்: எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பழைய நட்பைப் புதுப்பிப்பீர்கள்.
உத்திராடம் 1: சகஊழியர்களிடம் நிதானமாகப் பேசி வெற்றி அடைவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
திருவோணம்: பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தினருடன் விருந்து ஒன்றில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும்.
சதயம்: கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எவருடனும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: தீயோர் நட்பால் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.
உத்திரட்டாதி: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த தடைகள் அகலும்.
ரேவதி: காத்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும். சேமிப்பை அதிகரிப்பீர்கள்.

02nd November Today Raasi Palankal

Related posts

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என தெரியுமா..!

Tharshi

18-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

100க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் : கலக்கத்தில் உக்ரைனிய நகரங்கள்..!

Tharshi

Leave a Comment