குறும்செய்திகள்

பரந்தனில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை..!

Young family member murdered in Paranthan

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் வெட்டுக்கயங்களுடன் ஒரு பிள்ளையின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சடலத்தில் முகத்தின் மீது கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, சம்பவ இடத்திற்கு இன்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனவும் இவர் குடும்பத்தகராறு காரணமாக குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாகவும் அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young family member murdered in Paranthan

Related posts

Cheryl Steals Kate Middleton’s Beauty Icon Status

Tharshi

இன்றும் நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகள் : பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு..!

Tharshi

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் அதிரடி கருத்து..!

Tharshi

3 comments

Leave a Comment