குறும்செய்திகள்

துப்பாக்கியுடன் மாஸான அஜித்தின் ஏ.கே.61 ஃபர்ஸ்ட் லுக்..!

Ajiths AK61 First Look Released 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ”ஏ.கே.61” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

”வலிமை” படத்திற்குப் பிறகு அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ”ஏ.கே. 61” படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ”துணிவு” என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

மேலும், அஜித் கையில் துப்பாக்கியுடன் படுத்திருப்பது போல் அமைந்துள்ள இந்த மாஸான லுக் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Ajiths AK61 First Look Released

Related posts

பிசாசு 2 படத்திற்காக உச்சக் கட்ட கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆண்ட்ரியா..!

Tharshi

கொரோனா பொது நிவாரண நிதி : நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

Tharshi

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 : லீக்கான தகவல்கள்..!

Tharshi

Leave a Comment