குறும்செய்திகள்

தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் என் போராட்டம் தொடரும் : அகிம்சா விக்கிரமதுங்க..!

Ahimsa wickramatungas struggle for justice will continue

ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் பரப்புரையையும் வலுப்படுத்தியுள்ள நிலையில், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்தை தொடரப் போவதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்

ஹேக்கின் சிவில் சமூக அமைப்புகளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்கும் தீர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து தெரிவிக்கையில்..,

”மக்கள் தீர்ப்பாயத்தில் எனது தந்தையின் படுகொலை தொடர்பான தீர்ப்பை வழங்கியதை செவிமடுத்தேன். நாங்கள் இலங்கை அரசாங்கம் இதனை செய்யும் என்ற எதிர்பார்ப்பிலேயே 13 வருடங்களாக காத்திருந்தோம் என அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

என்னைப் போன்ற தங்கள் குடும்பத்தவர்களிற்கு நீதி தேடுபவர்களிற்கு பல வருடங்களாக இலங்கை அரசாங்கம் நீதிக்கான கதவை அடைத்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களிற்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க, மக்கள் தீர்ப்பாயத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பாயம் காரணமாக எனது தந்தையை போல கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களிற்கு நீதிமன்றம் போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது, எனது தந்தையின் படுகொலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் வலுவானவை மற்றும் கட்டாயமானவை என்பதை மக்கள் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது, எனது தந்தைக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் இலங்கை அரசாங்கமும் குற்றவாளிகள் என்பதையும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

இத் தீர்ப்பு ஒரு ஆரம்பமே இது எனது விடாமுயற்சி எனது பரப்புரை ஆகியவற்றை வலுப்படுத்தும். அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துவதற்கு எனது சட்டத்தரணிகள் இந்த தீர்ப்பை பயன்படுத்துவார்கள்.

தொடர்ந்து எனது தந்தைக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்.”

இவ்வாறு அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

Ahimsa wickramatungas struggle for justice will continue

Related posts

IBM Wins $83 Million From Groupon In Internet Patent Fight

Tharshi

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

Tharshi

சுன்னாகம் பகுதியில் கொவிட் தொற்று உறுதியான 10 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல மறுப்பு..!

Tharshi

Leave a Comment