குறும்செய்திகள்

நிவாரணத்திற்குப் பதில் உயரும் மின் கட்டணம் : சஜித் குற்றச்சாட்டு..!

Sajith blames the government

தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்றைய (22) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், மதத் தலைவர்கள் குழுவொன்று தன்னைச் சந்தித்ததாகவும், இது தொடர்பில் மத ஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..,

”நாடு வக்குரோத்து நிலையிலுள்ள போதும், அதனை முறையாகவும் திட்டமிட்டுச் செய்தால் இந்நாட்டின் அத்தியாவசியமான துறைகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மூலங்களைப் பெறுவதற்கு சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற முடியும்.

ஆனாலும், இது தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த வித வேலைத்திடமும் இல்லை அதற்கு மாறாக, அரசாங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் சார், மக்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும், வழங்க முடியுமான நிவாரணத்தைக் கூட வழங்காமல் மக்கள் மீது சுமையை ஏற்றுவது தான் இன்று நடந்திருக்கின்றது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sajith blames the government

Related posts

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் அதிரடி கருத்து..!

Tharshi

நேற்றைய தினத்தில் நாட்டில் 175 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

Tharshi

Leave a Comment