குறும்செய்திகள்

09-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

அக்டோபர் 09,2022
இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 22, ஞாயிற்றுக்கிழமை, 9.10.2022,
பவுர்ணமி திதி நள்ளிரவு 3:11 மணி வரை,
அதன்பின் பிரதமை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 5:43 மணி வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31 – 9:00 மணி.
ராகு காலம்: மாலை 4:30 – 6:00 மணி.
எமகண்டம்: மதியம் 12:00 – 1:30 மணி.
குளிகை: மதியம் 3:00 – 4:30 மணி.
சூலம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்.
சந்திராஷ்டமம்: மகம், பூரம்.
பொது: பவுர்ணமி விரதம், கிரிவலம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை.
பரணி: திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
கார்த்திகை 1: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்களில் அதிக முயற்சி தேவைப்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும்.
திருவாதிரை உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய முயற்சி வெற்றி பெறும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
பூசம்: தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். புதிய ஆட்களை வேலையில் சேர்ப்பீர்கள்.

சிம்மம் :

மகம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
பூரம்: சந்திராஷ்டமம் என்பதால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். முயற்சிகள் தாமதமாகும்.
உத்திரம் 1: வேலைப்பளு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும்.
சித்திரை 1, 2: உங்கள் திறமை வெளிப்படும். வீட்டிற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சுவாதி: நண்பர்களின் ஒத்துழைப்புடன் செயலில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணம் நன்மை தரும்.
விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: தொழிலில் உங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஒருவர் தேடி வருவார்.

தனுசு:

மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர்கள்.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு உண்டு.
உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து லாபம் காண்பீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
அவிட்டம் 1, 2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: பிறரது பிரச்னைகளில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: மனதில் குழப்ப நிலை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
ரேவதி: குடும்பத்திற்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சி இழுபறியாகும். செயலில் கவனம் தேவை.

09th October Today Raasi Palankal

Related posts

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தலில்..!

Tharshi

இந்தியில் இரண்டு பட வாய்ப்புக்களை தூக்கியெறிந்த காதல் நாயகி..!

Tharshi

ரஜினியின் ஜெயிலர் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

Leave a Comment