குறும்செய்திகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 க்யூட் போட்டியாளர்களின் பின்னணி..!

Bigg Boss Tamil Season 6 endearing Contestants Backstory

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகல துவக்க விழாவுடன் தொடங்கி உள்ளது.

கடந்த 5 சீசன்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த கமல்ஹாசன் 6 வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளார்.

அந்த வகையில் ஜிபி முத்து, அசல் கோலார், சிவின் கணேசன், அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரச்சிதா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ், ஜனனி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், மெட்டி ஒலி சாந்தி அரவிந்த், குயின்ஸி, நிவாஷினி, விஜே விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட 20 பேர் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அந்த பிரவலங்கள் யார் என்பதையும் அவர்களது பின்னணியையும் தெரிந்து கொள்வோம்.

ஜிபி முத்து

GBMuthu

கொரோனா ஊரடங்கின் போது டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ் என சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் ஜிபி முத்து.

ஜிபி முத்துவின் பேச்சு வெள்ளந்தியாக இருந்தாலும், சில நேரங்களில் இரட்டை அர்த்தங்களிலும் பேசி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் ஜிபி முத்து கலந்து கொள்வது ரசிகர்களுக்கு தக்காளித் தொக்காக அமைந்துள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இனி கண்டெண்ட்களுக்கு குறை இருக்காது என இப்போதே கமெண்ட்ஸை போட்டுத் தள்ளுகின்றனர்.

அசல் கோலார்

Asal

தமிழ் ராப் மற்றும் கானா பாடகரான அசல் கோலாரின் உண்மையான பெயர் வசந்த குமார். தமிழ் பாடகரான இவர் பல தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். போனா போவுரா, லைஃப் ஆஃப் இளங்கலை, காவா போன்றவை இவர் பாடிய பாடல்களில் சில. அசல் கோலாரின் முதல் காபி வித் காதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் பரிசை தட்டிச் செல்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிவின் கணேசன்

Sivin Ganesan

இந்த சீசனில் திருநங்கை ஷிவின் கணேசன் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார்.

அங்கு மாடலாக மாறிய ஷிவின் கணேசன் சில ஆண்டுகள் சிங்கபூரிலேயே மாடலாக இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்த போதும் அவருடைய பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடந்த முறை நமிதா மாரிமுத்து கலந்து கொண்டு நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

இந்த சீசனில் என்றாலும் ஷிவினை பிக் பாஸ் வீட்டில் அழ வைக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 6 endearing Contestants Backstory

Related posts

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Tharshi

13-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்தியா-இலங்கை 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி..!

Tharshi

Leave a Comment