குறும்செய்திகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 க்யூட் போட்டியாளர்களின் பின்னணி..!(2ஆம் இணைப்பு)

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியானது, கமல்ஹாசன் தொகுத்து வழங்க, கோலாகல துவக்க விழாவுடன் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஜிபி முத்து, அசல் கோலார், சிவின் கணேசன், அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரச்சிதா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ், ஜனனி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், மெட்டி ஒலி சாந்தி அரவிந்த், குயின்ஸி, நிவாஷினி, விஜே விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட 20 பேர் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அந்த பிரவலங்கள் யார் என்பதையும் அவர்களது பின்னணியையும் தெரிந்து கொள்வோம்.

அசீம்

Azeem

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த “பகல் நிலவு” என்ற தொடரில் நடித்திருந்தார். இத்தொடரில் அசிம்-சிவானி கெமிஸ்ட்ரி வேற லெவல். மேலும், இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் லெவல் தான் அசீம் மனைவியை பிரிந்தார் என்றும் அசீம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் தன் மகள் பெயர் பாதிக்கும் என்று ஷிவானி அம்மா பிரச்னை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

பிக் பாஸ் 4 இல் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ள முயற்சிகள் நடந்தது. இப்படி இரண்டு முறை பிக் பாஸ் வாய்ப்பை இழந்த அசீம் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கும் நுழைந்து இருக்கிறார். இவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ராபர்ட் மாஸ்டர்

Robert Master

தமிழ் சினிமாவில் ராபர்ட் மாஸ்டர் கிட்டத்தட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தான் ராபர்ட் மாஸ்டர் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் 1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தமிழ் செல்வன் படத்தில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார்.

கல்லூரி சாலை படத்திலும் மற்றும் லவ் டுடே படத்தில் “என்ன அழகு எத்தனை அழகு” பாடலில் பேக் டான்ஸராக நடனமாடியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்திலும் “போட்டு தாக்கு” பாடல் மூலம் இவரது சினிமா வாழ்க்கையை அப்படியே மாறியது.

அதன் பிறகு விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு டான்ஸர் படத்தில் சிறந்த வில்லனான தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்.

மேலும் இவர் வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் சீசன் 6 இல் பங்கேற்றுள்ளார். இவருக்கும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆயிஷா

Aysha

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த முறை போட்டியாளராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆயிஷா ஜீனத் பீவி.

1993 ஆம் ஆண்டு காசர்கோட்டில் பிறந்தவர் ஆயிஷா ஜீனத் பீவி. சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், கடந்த 2017 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள், ஜீ தமிழில் வெளியான சத்யா, செம்பருத்தி, சத்யா 2 சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா தான் இனி அடுத்த 100 நாட்களுக்கு பிக் பாஸ் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

பார்த்த உடனே பிடித்துப் போகும் முக அழகை கொண்ட இவருக்கெல்லாம் இமிடியட்டா ஆர்மி ஆரம்பித்து விடுவார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 6 endearing Contestants Backstory

Related posts

பட வாய்ப்புக்காக வெற்றி இயக்குனரை விடாமல் துரத்தி வரும் நடிகர்..!

Tharshi

18-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கோடை காலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழி முறைகள்..!

Tharshi

Leave a Comment