குறும்செய்திகள்

21-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

21st October Today Raasi Palankal

அக்டோபர் 21,2022

சுபகிருது வருடம், ஐப்பசி 4 வெள்ளிக்கிழமை, 21.10.2022,
தேய்பிறை ஏகாதசி திதி மாலை 4:35 மணி வரை,
அதன் பின் துவாதசி திதி, மகம் நட்சத்திரம் மதியம் 12:30 மணி வரை
அதன்பின் பூரம் நட்சத்திரம். மரண – சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00 – 10:30 மணி.
ராகு காலம்: காலை 10:30 – 12:00 மணி.
எமகண்டம்: மதியம் 3:00 – 4:30 மணி.
குளிகை: காலை 7:31 – 9:00 மணி.
சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.
பொது: ஏகாதசி, அம்பிகை வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்வீர்கள். எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப நலன் மேம்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாளாக தள்ளி வைத்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.
ரோகிணி: அரசு வழியிலான முயற்சியில் வெற்றி உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பகைவர் தொல்லை விலகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். சகோதரர் வழியில் நன்மை உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: தைரியமாக செயல்படுவீர்கள். விஐபிகள் ஆதரவுடன் முயற்சி ஒன்று நிறைவேறும். லாபமான நாள்.

கடகம்:

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பேசித் தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.
பூசம்: தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
ஆயில்யம்: புதிய நபர்கள் அறிமுகமாவர். அவர்களால் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம் :

மகம்: தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். எச்சரிக்கை அவசியம்.
பூரம்: ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.
உத்திரம்1: செயல்கள் இழுபறியாகும். தேவையற்ற சிந்தனை மேலோங்கும். மனதில் குழப்பம் இருக்கும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அஸ்தம்: யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவு ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள்
சித்திரை 1, 2: அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவு செய்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: வராமல் இருந்த ஒரு தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: உங்கள் தேவை பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும்.
கேட்டை: குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். தடைபட்ட வருவாய் வரும்.

தனுசு:

மூலம்: குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும்
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
உத்திராடம் 1: சொத்து வாங்கும் முயற்சி மதியத்திற்கு மேல் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காப்பது நல்லது. முயற்சிகள் இழுபறியாகும்.
திருவோணம்: மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
அவிட்டம் 1, 2: வேலைகளில் குழப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு சோர்வடைவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: திறமை வெளிப்படும் நாள். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவர். வருமானம் அதிகரிக்கும்.
சதயம்: உங்களைத் தேடி பொறுப்பு வரும். உங்கள் பலத்தை நீங்கள் அறிவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி கூடும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த உதவி கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பநிலை உயரும்.
உத்திரட்டாதி: விலகிச் சென்ற உறவினர் தேடி வருவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும்.
ரேவதி: சொத்து சம்பந்தமான பிரச்னையில் சுமூகத்தீர்வு காண்பீர்கள். முயற்சி ஆதாயமாகும்.

21st October Today Raasi Palankal

Related posts

ரிஷாத் பதியுதீன் மனு மீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

Tharshi

தனது தொண்டு நிறுவனம் மூலம் இலவச தடுப்பூசி வழங்கிய பிரணிதா..!

Tharshi

16-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment