குறும்செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் போட்ட குத்தாட்டம் : கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிய ஜி.பி.முத்து..!

BiggBoss Season 6 Today Episode

இன்று பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா மற்றும் ஜனனி இருவரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” பாடலுக்கு சிறப்பாக குத்தாட்டம் போட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டின் இந்த சீசனில் ரச்சிதா ஜனனியை தனது தத்துப்பிள்ளையாகவே எடுத்துக் கொண்டார் போல, இருவருக்கும் அந்த அளவுக்கு பாசப்பிணைப்பு உருவாகியுள்ளது.

Video Source : Vijay Television

அதைத் தொடர்ந்து, “கதை சொல்லும் நேரம்” டாஸ்க் ஆரம்பிக்க, அனைவரும் சபையில் கூடினார்கள். முத்து மட்டும் பவுடர் பூசுவதில் பிஸியாக இருக்க, “வாங்க தலைவரே.. டயமாச்சு” என்று மற்றவர்கள் அலற, ஓடி வந்தார் முத்து.

‘ஹோம் சிக்’ காரணமாக மன அவஸ்தை கொள்ளத் தொடங்கி விட்டார் முத்து. ‘என் பிள்ளை என்னைத் தேடுவான். நான் வெளில போறேன். நீங்க பஸ்ஸர் அடிங்க’ என்றெல்லாம் அனத்தத் துவங்கி விட்டார். அவரை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “நீங்க இல்லைன்னா காமெடி கன்டென்ட்டிற்கு நாங்க என்ன செய்வோம்?” என்று உள்ளபடி கேட்காமல் “வீட்ல எல்லோரும் நல்லாயிருக்காங்க.. நல்லா விளையாடிட்டு வர்றீங்க. இது பெரிய வாய்ப்பு. உலகம் முழுக்க பார்ப்பாங்க” என்று உசுப்பேற்றி விட தற்காலிகமாக சமாதானம் ஆனார் முத்து.

முத்துவை அழைத்த பிக் பாஸ் “இங்க நிறைய விதிமீறல் நடக்குது. தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்புல இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருக்கலாமா? தலைவர்னாலே இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாங்க”ன்னு மக்கள் நெனக்கறாங்க… பிக் பாஸ் வீட்லயும் அப்படி நடக்கலாமா? இனிமே இங்க தப்பு செய்யறவங்களுக்கு தண்டனை கொடுங்க. நீங்களும் முன்னுதாரணமாக இருங்க” என்று அறிவுறுத்த, தாள் பணிந்து கேட்டுக் கொண்டார் முத்து.

BiggBoss Season 6 Today Episode

Related posts

சிம்புவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

ஆணியே புடுங்க வேணாம் போடி.. : கணவன் – மனைவி ஜோக்ஸ்..!

Tharshi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

1 comment

Leave a Comment