குறும்செய்திகள்

கணவரை விட்டு பிரிந்த காரணத்தை பிக்பாஸிடம் போட்டுடைத்த ரச்சிதா..!

BiggBoss6 Rachitha told the reason why she left her husband

பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது கணவரை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை நடிகை ரச்சிதா கூறியுள்ளார்.

புகழ்பெற்ற பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழில் தனது ஆறாவது சீசனைத் தொடங்கி இருக்கிறது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் 20 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் சின்னத்திரைக் கதாநாயகியான ரச்சிதாவும் ஒருவர். நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்களான நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்த வந்தப் பாதை குறித்துப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அதில் ரச்சிதா தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, தனது கணவர் தினேஷை விட்டு தற்போது பிரிந்து வாழ என்ன காரணம் என்பதை கூறியுள்ளார். ரச்சிதா- தினேஷூக்கு திருமணமாகி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியப் பேச்சு எழுந்துள்ளது.

ரச்சிதா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்த அதனை ரச்சிதா மறுத்துள்ளார்.

இதனால், தினேஷூக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனவருத்தத்தினால் தற்காலிகமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் எனக் காரணம் சொல்லி உள்ளார் ரச்சிதா.

இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர் என்ற பேச்சு எழுந்த நிலையில், தங்கள் பிரிவுக்கானக் காரணத்தை முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ரச்சிதா.

BiggBoss6 Rachitha told the reason why she left her husband

Related posts

09-10-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இணையத்தில் லீக்கான கூகுள் பிக்சல் 7a விவரங்கள்..!

Tharshi

கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

Tharshi

1 comment

Leave a Comment