குறும்செய்திகள்

செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷாவினால் பரபரப்பான பிக்பாஸ் இல்லம்..!

Aysha took off her sandal and went to beat the Bigg Boss house

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை முதல் வெளியாகி வந்த ப்ரோமோக்கள் அனைத்தும் பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது பிக் பாஸ் வீடு சந்தைக் கடை ரேஞ்சுக்கு மாறி இருக்கிறது.

அந்தவகையில், இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ராங்கிங் பிரகாரம் நிற்குமாறு பிக்பாஸ் கூறுகின்றார். அதில் அசீம் கருத்துக் கூறுகின்றார்.

அதாவது, தகுதி இல்லாத பல பேர் நிற்பதாகவும், அதில் 9 ஆம் இலக்கத்தில் நின்ற ஆயிஷாவை பார்த்து “சுத்தமாகவே தகுதி இல்லாத ஆளு” என்றும் அசீம் கூற, கடுப்பான ஆயிஷா நான் எந்த விதத்தில் தகுதி இல்லாத ஆளு எனக் கேட்டு சண்டையை ஆரம்பிக்கின்றார்.

அதற்கு உடனே அசீம் “நீ தூக்கத்தை தவிர வேற என்ன தான் பண்ணி இருக்காய்” எனக் கேட்கின்றார். உடனே ஆயிஷா “நீங்க மட்டும் தூங்கலயா” எனப் பதிலுக்கு கேட்கின்றார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் வாய்ச் சண்டை பெரிதாக ஆரம்பிக்க அசீம் ஆயிஷாவை “வாடி போடி..” என்ற வார்த்தைகளால் திட்டுகின்றார்.

இதனால் கோபம் கொண்ட ஆயிஷா, அவரது செருப்பை கையில் எடுத்து எறிந்த ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aysha took off her sandal and went to beat the Bigg Boss house

Related posts

விரைவில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..!

Tharshi

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Tharshi

கடன் சுமையில் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கித் தவிக்கும் முன்னணி நடிகர்..!

Tharshi

Leave a Comment