குறும்செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்..!

Special instruction for school students

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை எவ்வாறு ஆரம்பிக்கப்படும் மற்றும் முடிவடையும் என்பது தொடர்பிலும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (24) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்ப் பாடசாலைகளின் தேவை கருதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை விடுமுறை வழங்கலாம் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில் பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Special instruction for school students

Related posts

இன்றைய முக்கிய செய்திகள் (09.06.2021) (காணொளி)

Tharshi

ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் வழங்கிய நூதன தண்டனை..!

Tharshi

யாழ்.சாவகச்சேரியில் இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம்..!

Tharshi

Leave a Comment