குறும்செய்திகள்

என் உடல்நிலை பற்றி வெளியே சொல்ல பயம் : கதறியழுத சமந்தா..!

Samantha interviewed about her health condition

தன்னுடைய உடல்நலன் குறித்து நடிகை சமந்தா முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள “யசோதா” திரைப்படம் வரும் 11 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக நடிகை சமந்தா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய உடல்நலன் பற்றியும் முதல் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது :-

“என் வாழ்க்கையில் நல்ல நாட்களைப் போலவே மோசமான நாட்களும் இருந்திருக்கின்றன. சில நாட்கள் படுக்கையை விட்டு எழவே கடினமானதாக இருக்கும். அது போன்ற நாட்களை சண்டையிட்டு கடந்து வரவே விரும்புவேன். என் உடல்நலன் சரியில்லாமல் போய் மூன்று மாதங்கள் ஆகிறது. ஒரு விஷயம் இங்கு அனைவருக்கும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

சில கட்டுரைகள் இந்த நோய் வாழ்க்கையை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும் என எழுதி இருக்கிறார்கள். எனக்கு அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் ஆகி விடாது. ஆமாம், இது நோய் எதிர்ப்பு குறைபாடுதான். இது என்னை முழுவதுமாக சோர்வாக்கி இருக்கிறது. ஆனால், எனக்குத் தெரியும்.

நான் ஒரு போராளி. இதனுடன் போராடி எப்படியும் வென்று விடுவேன். இதுபோன்ற சமயத்தில் எனக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து வரக்கூடிய நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் சமந்தா.

மேலும், “ஒரு பிரபலமாக எப்படி தன்னுடைய நல்ல விஷயங்கள், படங்கள், வாழ்க்கை, ஃபோட்டோஷூட் என அனைத்தையும் அனைவருடனும் பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறேனோ அது போல தன்னுடைய மோசமான நாட்களும் அனைவருக்கும் தெரிய வேண்டும். பிரபலம் என்றால், எல்லாமே இருக்கும்” எனவும் கூறியுள்ளார் சமந்தா.

Samantha interviewed about her health condition

Related posts

தெலுங்கு படத்தில் வில்லனாக மிரட்டும் விஜய்சேதுபதி..!

Tharshi

12-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

யாழில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!

Tharshi

1 comment

Leave a Comment