குறும்செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அப்பா..!

Dad who supported Robert Love in the Bigg Boss house

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசனிலும் ஒரு டான்ஸ் மாஸ்டர் கண்டிப்பாக இருப்பார்கள். இப்போது ஆறாவது சீசனில் போட்டியாளராக இருப்பவர் தான் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்.

இவர் அந்த வீட்டில் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து வருகிறார். ஆனாலும் வீட்டிற்குள் வந்த கொஞ்ச நாளிலேயே ரட்சிதாவின் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

மேலும் அவருடைய சொந்த வாழ்க்கையை பற்றி பேசும் போது, தனக்கு சின்ன வயதிலேயே போலியோ அட்டாக் வந்துவிட்டதாகவும், தன்னுடைய தந்தையின் முயற்சியாலேயே நடந்ததாகவும், நடனம் கற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் பிரிவை பற்றியும் பேசியிருந்தார்.

சமீபத்தில் ராபர்ட் மாஸ்டரின் தந்தையிடம் பேசிய போது அவர் மிகவும் கண்ணீர் மல்கவே தன்னுடைய மகனை பற்றி பேசினார். ராபர்டுக்கு போலியோ அட்டாக் வந்தது உண்மை தான் என்றும், மேலும் அவர் 18 வயதிலேயே காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும், இன்றுவரை தன்னுடைய பேத்தியை பார்த்ததே இல்லை என்றும் கூறினார்.

மேலும் ராபர்ட், ரட்சிதாவை காதலிக்க வாய்ப்பே இல்லை, அந்த நிகழ்ச்சிக்காகவே அவர் அப்படி விளையாடி கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். அப்படியே அவர் காதலித்தாலும் எந்த தப்பும் இல்லை, இது இயல்பான ஒன்று இதில் முகம் சுளிக்கும் அளவுக்கு தன்னுடைய மகன் எதுவும் தப்பாக செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

ராபர்ட் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதற்கு வனிதா தான் உதவியதாக அவர் பல யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். அதற்கு பதிலளித்த ராபர்டின் தந்தை, வனிதா உதவியதாக ராபர்ட் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும், பிக்பாஸ் வீட்டில் கூட அவர் இதை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ராபர்ட் வெளியில் வந்தால் தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்றும் சொல்லிவிட்டார்.

ராபர்ட் பிக்பாஸ் வீட்டிற்குள் இயல்பாகவே இல்லை, மிகவும் துறுதுறுவென்று இருக்க கூடியவர் அங்கே ரொம்பவும் அமைதியாக இருப்பதாகவும், அவர் இயல்பு நிலையில் இருந்து, இன்னும் நன்றாக விளையாடி பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் ராபர்ட் மாஸ்டரின் தந்தை தெரிவித்து இருக்கிறார்.

Dad who supported Robert Love in the Bigg Boss house

Related posts

ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கம்..!

Tharshi

மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கம்..!

Tharshi

25-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment