குறும்செய்திகள்

47 வயது பெண் ஒருவரை காணவில்லை : பொலிசில் முறைப்பாடு..!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான சடாச்சரம் தேவலஷ்மி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவரது கணவர் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில் தனது மகனுடன் குறித்த பெண் வாழ்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்து 22 ம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது மகன் நேற்று (27) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் காணாமல் போயுள்ளவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 065-2056936 கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிகை விடுத்துள்ளனர்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை..!

Tharshi

மாகாண சபைத் தேர்தல் விரைவில்..!

Tharshi

வெலிக்கடை சிறைக் கூரையில் இன்றும் தொடரும் போராட்டம்..!

Tharshi

Leave a Comment