குறும்செய்திகள்

சறுக்கிய சில்வர் ஸ்க்ரீன் என்ட்ரி : மீண்டும் முருங்கை மரம் ஏறிய டிவி நடிகை..!

அந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான டிவி நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் ஆரம்பத்தில் கொட்டுவதும் அதன் பின்னர் அவர்களிடம் சரக்கு இல்லை என்பது தெரிந்ததுமே ஃபீல்டு அவுட் ஆவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.

அதில், லேட்டஸ்ட்டாக அந்த குத்தாட்ட பாப்பா நடிகை இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமே கதியென கிடந்த நிலையில், அடுத்தடுத்து வாய்ப்புகள் அம்மணிக்கு ஏக போகத்துக்கும் குவிந்தன.

ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்ததும் அடுத்தடுத்து சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க தவறி விட்டால் என்ன நிலை நேறுமோ அதே நிலை தான் தற்போது அந்த டிவி நடிகைக்கு ஏற்பட்டுள்ளது.

ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான உடனே அந்த டிவி நடிகைகளை அப்படியே சினிமா நடிகைகளாக மாற்றி வருகின்றனர். ஆனால், ஸ்ட்ராங்கான திறமை ஏதும் இல்லாமல் அழகு பதுமைகளாக இருக்கும் நடிகைகள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு 3 முதல் 4 படங்களில் நடித்து விட்டு பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர்.

அப்படி சமீபத்தில் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை ஒரு பெரிய படத்தில் சின்ன ரோலில் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதன் பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அத்தனையும் தொடர்ந்து ஃப்ளாப் ஆகி வரும் நிலையில், அந்த குத்தாட்ட பாப்பாவை யாருமே கண்டு கொள்ளவில்லையாம்.

இளம் நடிகையாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், இப்படி சில்வர்ஸ்க்ரீன் வாய்ப்புகள் சரிவை சந்தித்து வருவதால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் அந்த பியூட்டி குயின். புதிய பட வாய்ப்புகள் வராத நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடி கொண்டுள்ளார்.

புதிய பட வாய்ப்புகளுக்காக மீண்டும் இன்ஸ்டா பக்கமே கதியென ஆட்டம் போட்டு வருகிறார். ஆனால், முன்பு போல நடிகையின் வீடியோ எல்லாம் டிரெண்டாகாமல் டல் அடித்து வருவதால் எப்படியாவது சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைக்க ஏகப்பட்ட பிளான்களை போட்டு வருகிறாராம் அந்த இளம் நடிகை.

பழையபடியே டைம் டேபிள் எல்லாம் போட்டு மீண்டும் அதே முருங்கை மரத்தில் ஏறியது போல குத்தாட்டம் போட்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் வருகிறாராம் அந்த இளம் நடிகை. மேலும், நடிகை காதல் வலையில் விழுந்து விட்டார் என்றும் அதனால் தான் சினிமாவில் சரியாக அவர் கவனம் செலுத்துவதில்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Related posts

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Tharshi

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

யாழ். வடமராட்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் திடீர் மரணம்..!

Tharshi

3 comments

Leave a Comment