குறும்செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது..!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி தமிழகத்தின் கோயம்புத்தூரில் கோவில் ஒன்றுக்கு முன்னால் கார் ஒன்றை வெடிக்க வைத்து தகர்த்த சம்பவத்துடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேக நபருடன் தொடர்பு கொண்டிருந்த ஐ.எஸ் ஐ எஸ் உறுப்பினர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணையின் படி, இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் “சனோபர் அலி” என்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹாசிமுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

2வது டி20 : இரண்டாவது போட்டியிலும் இலங்கையை வீழ்த்தியது இந்தியா..!

Tharshi

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என தெரியுமா..!

Tharshi

பெய்ரூட்டில் வெடித்தது அம்மோனியம் நைட்ரேட் வெடிகுண்டு : வெடிபொருள் நிபுணர்கள் கருத்து..!

Tharshi

Leave a Comment