குறும்செய்திகள்

நான்கரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த பரிதாபம்..!

சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

கண்டளம பகுதியில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் குழந்தை தங்கியிருந்த போது, ​​வீதியில் சூன் பான் முச்சக்கர வண்டி சத்தம் கேட்டு தனது தாத்தாவிடம் பாண் வாங்க பணம் வாங்கி குழந்தை வீதிக்கு அருகில் ஓடி வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த இடத்தில் குடிபோதையில் இருந்த தம்புள்ளை கண்டளம கெப்பல பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய என்பவர் இந்த குழந்தையை திட்டிவிட்டு சூன் பான் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டு இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, அஜித் வர்ணசூரிய கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த குழந்தையை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து வைத்தியசாலை வைத்தியர்களே சம்பவம் தொடர்பில் சந்தேகம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

Related posts

25-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஆன்லைன் ஆபத்துக்கள் : அச்சத்தில் சிறுமிகள்..!

Tharshi

Facebook’s $100 billion-plus Rout is The Biggest Loss in Stock Market History

Tharshi

Leave a Comment